தளபதி 64 திரைப்படத்தில் இணையும் பிரபல நடிகை.! உச்சகட்ட கொண்டாட்டம்

0

தளபதி விஜய் பிகில் படத்தை தொடர்ந்து அடுத்ததாக மாநகரம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 64 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார், இந்த திரைப் படத்தின் சூட்டிங் அடுத்த மாதம் துவங்கும் என தெரிகிறது. பிகில் படத்தின் ரிலீசுக்கு முன்பே இந்த திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

இந்தநிலையில் பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மிகவும் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. மேலும் தளபதி 64 திரைப்படத்திற்கான முதற்கட்டப் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகிறார்கள். தற்போது நடிகர் மற்றும் நடிகைகள் தேர்வு ஒருபுறம் மிகவும் வேகமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி தளபதி 64 திரைப்படத்தில் பேட்ட படத்தில் நடித்த மாளவிகா ஒரு முக்கிய ரோலில் விஜய்யுடன் நடிக்க இருக்கிறார் என்பதுதான், இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளார்கள்.

malavika
malavika