நடிகர் பிரபுதேவா ராஜசுந்தரம் சகோதரர்களின் இளைய சகோதரர் நாகேந்திர பிரசாத், இவர் தனது அண்ணன் போலவே நடன மாஸ்டராக மாறி அப்படியே படிப்படியாக சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். இவரின் முதல் திரைப்படம் தொட்டாசினிங்கி. இந்த திரைப்படம் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு கூட வெற்றி பெறவில்லை.
அதனால் இவருக்கு ஹீரோ கதாபாத்திரம் கைகொடுக்காத நிலையில் 2004 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளிவந்து ஹிட்டான கில்லி திரைப்படத்தில் அவருக்கு நண்பராக படம் முழுவதும் நடித்திருந்தார், இந்த திரைப்படம் மூலம் நல்ல அறிமுகம் கிடைத்தது, ஆனால் இதனை தொடர்ந்து நடிப்பதற்கு இவருக்கு பட வாய்ப்பு எதுவும் அமையவில்லை.
அதனால் மீண்டும் நடனத்தில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார், இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் தளபதி 64 திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் மகேந்திர பிரசாத் நடிக்க இருக்கிறார். விஜய் தனது சினிமா பயணத்தில் 27வது வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ள அதற்கு சினிமாவில் உள்ள பிரபலங்கள் அனைவரும் விஜய்க்கு வாழ்த்துக் கூறினார்கள்.
அதேபோல் நாகேந்திர பிரசாத்தும் சினிமாவிலும் தனது வாழ்க்கையிலும் எப்பொழுதும் விஜய் எனக்கு ஆதரவாகவும் நண்பராகவும் இருந்து வருகிறார், அவருடன் பல வருடத்திற்கு பிறகு மீண்டும் இணைந்துள்ளது மிக்க மகிழ்ச்சி என கூறியுள்ளார்.