தளபதி 64-ல் நீ இருக்கிறது ரொம்ப மகிழ்ச்சி மச்சி.! இயக்குனர் அதிரடி ட்விட்

0
thalapathy 64
thalapathy 64

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் விஜய், இவர் தற்போது அட்லீ இயக்கத்தில் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார், இதனை தொடர்ந்து அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார்.

இந்த திரைப்படத்தை பிரிட்டோ தயாரிக்க அனிருத் இசையமைக்க இருக்கிறார், படத்தில் விஜய் சேதுபதி, ஆண்டனி வர்கீஸ், மாளவிகா மோகனன் என பலர் நடிக்க உள்ளனர். இவர்களைத் தொடர்ந்து ஸ்ரீ மனம் இந்த திரைப்படத்தில் இணைந்துள்ளார்.

மேலும் மேயாதமான், ஆடை ஆகிய திரைப்படத்தில் இயக்கிய ரத்தினகுமார் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து பணியாற்றயிருக்கிறார். இதுகுறித்து லோகேஷ் கனகராஜ் தனது டுவிட்டரில் தளபதி 64 திரைப்படத்தில் நீ இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என டுவிட் செய்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் விஜய்யின் நண்பர்களான சஞ்சீவ் மற்றும் ஸ்ரீநாத் அவர்களும் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.