அட தளபதி 64 திரைப்படத்தில் இந்த பிக்பாஸ் பிரபலமா.! மாஸ் தகவல் இதோ.! கொண்டாட்டத்தில் ரசிகர்கள் .

0
vijay 64
vijay 64

தளபதி விஜய் அட்லி இயக்கத்தில் புலி படத்தில் நடித்து முடித்துள்ளார் இதனைத் தொடர்ந்து அடுத்ததாக மாநகரம், கைதி படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார் இந்த திரைப்படத்திற்கு தற்காலிகமாக தளபதி 64 என டைட்டில் வைத்துள்ளார்கள்.

இந்த திரைப்படத்தில் விஜய் இதுவரை யாரும் பார்க்காத புதிய தோற்றத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளன, அது மட்டும் இல்லாமல் விஜயுடன் இணைந்து விஜய் சேதுபதி, கேரளா நடிகர் வார்கீஸ் மற்றும் பேட்டை திரைப்படத்தில் நடித்தார் மாளவிகா, ஆகியோர்கள் நடிக்க இருக்கிறார்கள்.

இயக்குனர் லோகேஷ் விஜயுடன் இதுவரை நடிக்காத பலரைத் தேடி தேடி எடுத்துள்ளார், அதேபோல் படத்திற்கு அனிருத் தான் இசையமைக்க இருக்கிறார், இதெல்லாம் ஒருபுறமிருக்க விஜயுடன் பிக்பாஸ் டைட்டில் வின்னர் முகன் ராவ் தளபதி 64 திரைப்படத்தில் நடிப்பதற்கு இணைந்துள்ளார்.

இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு விரைவில் அறிவிக்கும் என தெரிகிறது. லோகேஷ் கனகராஜ் திரைப்படம் என்றாலே ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும், இவர் இயக்கத்தில் கைதி திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.