தளபதி 64 திரைப்படத்தில் இந்த நடிகையும் உண்டா.? ரசிகர்கள் கொண்டாட்டத்தில்

0
thalapathy-64
thalapathy-64

தளபதி விஜய் தீபாவளி விருந்தாக பிகில் திரைப்படம் வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது, இந்த திரைப்படம் இதுவரை 100 கோடி வசூலை கடந்து சாதனை படைத்து வருகிறது, பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ளது, இந்த திரைப்படத்தை AGS  நிறுவனம் மிகவும் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.

3 நாட்களில் 100 கோடி வசூல் செய்துள்ளதாள் தயாரிப்பாளர்கள் கொஞ்சம் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். ஆனால் படத்தின் முழு வசூல் விவரம் தெரிய வந்த பின்புதான் படத்தின் மொத்த பட்ஜெட் ஏற்றவாறு கலெக்ஷன் வந்துள்ளதா என்பதை அறிய முடியும், இந்த நிலையில் தளபதி விஜய் அடுத்ததாக தளபதி 64 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த திரைப்படத்தை பிகில் படத்துடன் மோதும் கைதி திரைப்படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் தான் இயக்கி வருகிறார், கைதி  திரைப்படம் தமிழ் சினிமாவில் ஒரு மிகச்சிறந்த திரைப்படம் என்றும் விருவிருப்பான கதைக்களம் என்பதால் மக்களுடைய நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.

தளபதி 64 திரைப் படத்தில் விஜய்யுடன் இணைந்து மாளவிகா மற்றும் சாந்தனு விஜய் சேதுபதி ஆகியோர் நடித்து வருகிறார்கள் தற்போது இவர்களுடன் நடிகை ஆண்ட்ரியாவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளன.