தளபதி 64 திரைப்படத்தில் இணைந்த விஜய் தொலைக்காட்சி தொகுப்பாளினி.! செம குஷியில் ரசிகர்கள்.!

0
thalapathy64
thalapathy64

தளபதி விஜயின் பிகில் திரைப்படம் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது இந்த நிலையில் அடுத்ததாக தளபதி-64 திரைப்படத்தில் விஜய் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தை கைதி திரைப்படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் தான் இயக்கி வருகிறார்.

மேலும் தளபதி 64 திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மேனன் நடித்து வருகிறார், இவர் சமீபத்தில் தளபதி-64 திரைப்படத்தில் சூட்டிங்கில் கலந்து கொண்டதை அவரே சமூக வலைதளத்தில் புகைப்படத்தை வெளியிட்டார்.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தளபதி 64 திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்க இருக்கிறார் என்ற தகவல் ஏற்கனவே படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது அது மட்டுமில்லாமல் மலையாள நடிகர் ஆண்டனி, சாந்தனு ஆகியோர்கள் தளபதி 64 திரைப்படத்தில் இணைந்துள்ளார்கள்.

இந்த நிலையில் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாலினியும் நடிகையுமான ரம்யா சுப்பிரமணியன் தளபதி 64 திரைப்படத்தில் இணைந்துள்ளார், இந்த தகவலை அவரே சமீபத்தில் உறுதி செய்தார் அதுமட்டுமில்லாமல் டெல்லியில் கடந்த 20 நாட்களாக தளபதி 64 சூட்டிங் படப்பிடிப்பில் ரம்ய கலந்து கொண்டுள்ளார் என்ற தகவலும் வெளியாகி உள்ளன.