தளபதி 64 டைட்டிலுடன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.! இதோ மாஸான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்.!

தளபதி விஜய் பிகில் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக தளபதி 64 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை மாநகரம் படத்தை இயக்கிய இயக்குநர் தான் இயக்கி வருகிறார் படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

மேலும் தளபதி 64 திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் அதுமட்டுமில்லாமல் மாளவிகா மோகன் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

மேலும் சாந்தனு, ஸ்ரீமன், சஞ்சீவ், விஜி ரம்யா, தீனா மேலும் பல நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள். படத்தை எக்ஸ்பி ஃபிலிம் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரித்து வருகிறது, மேலும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என அறிவித்திருந்தார்கள் ரசிகர்களை உச்சக்கட்ட கொண்டாட்டத்தில் இருந்தார்கள்.

இந்தநிலையில் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது அதுமட்டுமில்லாமல் இதை ரசிகர்கள் ஷேர் செய்து புத்தாண்டில் யாரும் முறியடிக்க முடியாத சாதனையை செய்ய இருக்கிறார்கள்.

thalapthy-64-is-master
thalapthy-64-is-master

Leave a Comment