அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக பிகில் திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் மிக பிரமாண்டமாக தயாரித்து வருகிறது, கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகி வரும் இந்த திரைப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.
நயன்தாரா நீண்ட வருடங்களுக்குப் பிறகு விஜய்யுடன் இணையும் திரைப்படமாகும், இதற்கு முன் விஜயுடன் வில்லு மற்றும் சிவகாசி திரைப்படத்தில் நயன்தாரா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் படத்திலிருந்து சிங்க பெண்ணை என்ற ஃபஸ்ட் டிராக் பாடலை படக்குழு ஜூலை 23ம் தேதி வெளியாக இருக்கிறது என அறிவித்துள்ளார்கள்.
இதெல்லாம் ஒருபுறமிருக்க தளபதி 64 திரைப்படத்தை மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகின, இந்த நிலையில் இந்த திரைப்படத்தை விரைவில் தொடங்க இருக்கிறார்கள், மேலும் மதுரையில் உள்ள விஜய் ரசிகர்கள் இப்பொழுதே தளபதி 64 திரைப்படத்தின் கொண்டாட்டத்தை தொடங்க ஆரம்பித்துவிட்டார்கள், அதாவது தளபதி 64 திரைப்படத்திற்காக ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வைத்துள்ளார்கள், இந்த புகைப்படம் ரசிகரிடம் வைரலாகி வருகிறது.
ஒட்டுமொத்த #மாநகரம் முழுவதும் #தளபதி #தம்பிகளை அன்பால் #கைதி ஆக்கிய
இயக்குனர் @Dir_Lokesh#தளபதி64 முதல் பார்வை எப்போது எதிர்பார்ப்புடன்….டாப் டக்கரு தளபதி தம்பிங்க – #மதுரை??#Thalapathy64 #SingaPpenney pic.twitter.com/KlwsVPIOul
— புலி இமான் (@pulimman) July 21, 2019