தளபதி 64 திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க இருக்கும் ரசிகர்களின் சென்சேஷனல் நாயகி.!

0

தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக இருப்பவர்களில் நடிகர் விஜய்யும் ஒருவர் இவர் நடித்து வரும் திரைப்படங்கள் வசூலில் புதிய சாதனை பெற்று வருகிறது,இந்த நிலையில் தளபதி விஜய் அட்லி இயக்கத்தில் மூன்றாவது முறையாக பிகில் திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படம் மிகவும் விறுவிறுப்பாக படமாக்கப்பட்டு வருகிறது.

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்தை வருகின்ற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரசிகர்களுக்கு விருந்தாக வெளியாக இருக்கிறது, இந்த திரைப்படத்தை முடித்துவிட்டு விஜய் அடுத்ததாக மாநகரம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஆக்ஷன் த்ரில்லரில் நடிக்க இருக்கிறார்.

இதன் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது இந்த நிலையில் இந்த திரைபடத்தில் யார் விஜய்க்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார் என்ற தகவல் புரியாத புதிராக இருந்து வந்தது. முதலில் விஜய் நடிக்க இருந்த தளபதி 64 திரைப்படத்தில் ராஷ்மி மந்தனா ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் என்று கிசுகிசுக்கப்பட்டது ஆனால் உறுதியாக கூறப்படவில்லை.

இந்த நிலையில் இதுகுறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் ரஷ்மிகா தளபதி 64 திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது உண்மைதான் அதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது என கூறினார்.