பிகில் படத்தில் இணைந்த முன்னாள் கால்பந்து விளையாட்டு வீரர்.! அதுவும் கேப்டன்

0
bigil
bigil

bigil : தளபதி விஜய் அட்லீ இயக்கத்தில் பிகில் படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தை, ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மிகவும் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது, படத்தில் விஜயுடன் இணைந்து நயன்தாரா, யோகி பாபு, விவேக் டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், கதிர் என பல நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள்.

படத்தில் விஜய் கால்பந்து கோச்சராக நடித்து வருகிறார் மேலும் சமீபத்தில் இந்த திரைப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் புகைப்படத்தை படக்குழு வெளியிட்டிருந்தார்கள். அதில் விஜய், இரண்டு கதாபாத்திரத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது அப்பா விஜய் மற்றும் மகன் விஜய் என இரண்டு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்து வருகிறார், இந்த நிலையில் படத்தில் முன்னாள் இந்திய கால்பந்து அணியின் கேப்டன் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன, இவர் கேரளாவைச் சேர்ந்த காவல்துறை அதிகாரியாக இருந்தவர் ஆம், எம் எஸ் விஜயன் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளன, இவர் இதற்கு முன் தமிழில் ஒரு சில திரைப்படங்களில் வில்லனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.