கிரௌண்டில் இறங்கி விளையாடும் தளபதியின் மகள்..! மகளின் ஆட்டத்தை ஓரமாக நின்று வேடிக்கை பார்க்கும் விஜய்..!

thalapathi vijay daughter image: தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக பிரதிபலிப்பவர் தான் தளபதி விஜய் இவர் பல ஹிட் திரைப்படங்களில் கதாநாயகனாக ரசிகர் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டார். அதுமட்டுமில்லாமல் இவர் நடிப்பில் உருவாகும் அனைத்து திரைப்படங்களும் பெரும் பட்ஜெட்டில் உருவாவது மட்டுமல்லாமல் வசூலிலும் வெளுத்துக்கட்டு வருகிறது.

அந்தவகையில் சர்க்கார், கத்தி, பிகில் போன்ற அனைத்து திரைப்படங்களும் மாபெரும் வெற்றி பெற்றது மட்டுமல்லாமல் பிளாக்பஸ்டர் திரைப் படமாக அமைந்துவிட்டது இந்நிலையில் சமீபத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் தான் மாஸ்டர்.

இந்த திரைப்படமும் மாபெரும் வெற்றியை பெற்று வசூலில் பெரும் சாதனை படைத்து விட்டது.  இந்த திரைப்படத்தை தொடர்ந்து தற்போது தளபதி 65வது திரைப்படத்தில் விஜய் நடிக்க உள்ளர் இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனர் நெல்சன் அவர்கள்தான் இயக்கி வருகிறார்.

நெல்சன் இதற்கு முன்பாக நயன்தாராவை வைத்து கோலமாவு கோகிலா எனும் திரைப்படத்தை இயக்கி மாபெரும் வெற்றி கண்டவர் இந்நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் நெல்சன் கைகோர்ப்போவதன் காரணமாக இந்த திரைப்படத்தில் எதிர்பார்ப்பது அதிகரித்துவிட்டது.

தளபதி விஜய்க்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளார் மகனை  பற்றி நம் அனைவருக்குமே தெரியும் தளபதியின் மகளை பற்றி  அதிக அளவு தெரிந்திருக்க வாய்ப்பே கிடையாது தளபதி விஜய்யின் மகள் பெயர் திவ்யா சாஷா. இவரும் திரைப்படத்தில் நடித்துள்ளார் அதாவது விஜய் நடிப்பில் வெளியான தெறி திரைப்படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் முகம் காட்டி இருப்பார்.

vijay-daughter
vijay-daughter

இவர் படிப்பு மற்றும் நடிப்பு ஆகிய துறைகள் மட்டும் இல்லாமல் ஒரு விளையாட்டு வீராங்கனை இவர் பேட்மிண்டன் விளையாட்டில் மிகச் சிறந்தவராக இருந்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் பல போட்டிகளில் கலந்துகொண்டு பல்வேறு பரிசுகளையும் வாங்கி கொடுத்தது மட்டுமல்லாமல் தனது தந்தைக்கு பெருமை சேர்த்து வருகிறார்.

தளபதி விஜய் திரைப்படத்தில் எவ்வளவு தான் பிசியாக இருந்தாலும் தன்னுடைய குழந்தைகளுடனும் மனைவியுடன் நேரத்தை செலவிடுவதில் மட்டும் முக்கியத்துவம் கொடுப்பார் அந்த வகையில் திவ்யா பேட்மிட்டன் விளையாடும் போது கண்டிப்பாக தளபதி விஜய் அங்கு சென்று விடுவார் அந்த வகையில் தனது மகள் விளையாடும் விளையாட்டை பின்னாடி நின்று ரசித்து வருகிறார்.

vijay-daughter
vijay-daughter
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment