2026 ல் தமிழ்நாட்டில் தொடரும் தளபதியின் மக்கள் இயக்கத்தின் ஆட்சி..! இணையத்தில் லீக்கான போஸ்டரால் அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

0

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாகவும் நம்பிக்கை நட்சத்திரமாகவும் வலம் வந்து கொண்டிருப்பவர் தான் தளபதி விஜய் இவர் சமீபத்தில் மாஸ்டர் எனும் திரைப்படத்தில் மாபெரும் வெற்றி கண்டுள்ளார்.  இத்திரைப்படத்தை தொடர்ந்து தற்போது பீஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகரின் பெயர் அடிக்கடி அரசியல் பக்கத்தை ஈடுபடுத்தி பேசுவது வழக்கமாகிப் போய்விட்டன. அந்தவகையில் தளபதி விஜய் ரசிகர்கள் எப்படியாவது நமது தலைவரை அரசியலுக்கு கொண்டு வர வேண்டுமென அதிக ஆசையில் இருந்து வருகிறார்கள்.

அந்த வகையில் இவர் தேர்தலின் பொழுது சைக்கிளில் சென்று வாக்கு பதிவு செய்தது சமூக வலைதள பக்கத்தில் மிக வைரலாக பரவிய நிலையில் சமீப காலமாக தளபதி விஜய் எடுக்கும் திரைப்படங்கள் அனைத்துமே பிரபல கட்சித் தலைவர்களின் நடவடிக்கைகளை புட்டுப்புட்டு வைப்பதுபோல் இருந்து வருகிறது.

அந்தவகையில் விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்  அவர்கள் தன்னுடைய ரசிகர்களுக்கு ஒரு அறிவுரை கொடுத்துள்ளார்.  அந்த வகையில் தளபதி விஜய்யை மற்ற தலைவர்களுடன் ஏன் இந்த போஸ்டர் ஒட்டுவது  அதிகமாகிக்கொண்டே வருகிறது.

vijay-2
vijay-2

இந்த செயலை தளபதிவிஜய் ஒருபோதும் விரும்புவது கிடையாது. ஆகையால் இது போன்ற செயல்களை நமது தளபதி ரசிகர்கள் செய்வதை தவிர்க்க வேண்டும்.  அவர் செய்வதை மீண்டும் தொடர்ந்தாள் தளபதி விஜயின் அனுமதியுடன் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

vijay-11
vijay-11

பொதுவாக ரசிகர்களின் ஆசையை  பல்வேறு வகையில் வெளிப்படுத்துவது வழக்கம் தான் அந்த வகையில்  நமது தளபதி ரசிகர்கள் கொஞ்சம் அட்வான்ஸாக தான் சென்றுள்ளார் அதன் விளைவு என்னதான் ஆகும் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.