லீக்கானது தளபதி 67 டைட்டில்..? லோகேஷ் டைட்டிலே கதை சொல்லுதே..!

0
lokesh-kanagaraj
lokesh-kanagaraj

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் ரசிகர்களின் கனவு கண்ணனாகவும் வளம் வந்து கொண்டிருப்பவர் தான் தளபதி விஜய் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சமீபத்தில் வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் தமிழ் மொழி மட்டும் இன்றி தெலுங்கு என பல்வேறு மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்தது.

மேலும் இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் மிகப் பெரிய சாதனை படைத்ததாக கூறப்படுகிறது அந்த வகையில் இவர் தற்பொழுது வாரிசு திரைப்படத்தில் நடித்திருந்தாலும் அவற்றை விட ரசிகர்கள் மிக ஆவலுடன் காத்துக் கொண்டிருப்பது தளபதி 67 திரைப்படத்தின் அப்டேட் காக தான்.

ஏனெனில் இந்த திரைப்படத்தை தோல்வியை துளி கூட சந்திக்காத இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள்  இயக்குவது மட்டுமில்லாமல் அவருடைய திரைப்படங்கள் எப்பொழுதும் வித்தியாசமாக இருப்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான் அது மட்டும் இல்லாமல் அவர் இயக்கம் திரைப்படங்கள் பெரும்பாலும் கேங்ஸ்டர் திரைப்படமாக தான் இருக்கும்.

இந்நிலையில் இந்த திரைப்படத்தில் திரிஷா ப்ரியா ஆனந்த் அர்ஜுன் என பல்வேறு பிரபலங்கள் நடிக்க போவதாக செய்திகள் வெளிவந்த நிலையில் படத்தின் பூஜை கூட சமீபத்தில் போடப்பட்டு அவற்றின் வீடியோ சமூக வலைதள பக்கத்தில் வெளியானது மட்டும் இல்லாமல் வைரலாக பரவி வந்தன.

மேலும் நடிகை திரிஷா கூட பூஜையில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்ட வைத்துள்ளார். மேலும் இவ்வாறு வெளிவந்த புகைப்படங்கள் அனைத்தும் சமூக வலைதள பக்கத்தில் ஏகப்பட்ட லைக்ஸ் களையும் கமாண்டுகளையும் பெற்று வருகிறது.

trisha
trisha

இந்நிலையில் இந்த திரைப்படத்தின் டைட்டில் பற்றிய அப்டேட் ஒன்று ட்விட்டர் பக்கத்தில் மிக வைரலாக பரவி வருகிறது அதாவது தளபதி நடிக்க போகும் இந்த திரைப்படத்திற்கு குருதிப்புனல் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது ஆனால் இவை எந்த அளவிற்கு உண்மை என்பது இன்றுவரை தெரியவில்லை.