தளபதி 66 திரைப்படத்தினை இரண்டு தயாரிப்பாளர்கள் இணைந்து தயாரிக்க உள்ளார்களாம் எந்தெந்த தயாரிப்பாளர்கள் தெரியுமா.? வெளிவந்த மாசான தகவல்

இந்திய சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருப்பவர் தளபதி விஜய் பொதுவாக விஜய் நடிப்பில் வெளிவரும் ஏராளமான திரைப்படங்கள் விமர்சன ரீதியாக தோல்வி அடைந்தாலும் எப்போதும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. என்றால் அதற்கு முக்கிய காரணம் விஜய்க்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள் அதோடு விஜய் பற்றிய பல தகவல்களையும் சோஷியல் மீடியாவில் பகிர்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

பொதுவாக விஜயை வைத்து எந்த தயாரிப்பாளர் படத்தை எடுத்தாலும் கண்டிப்பாக போட்ட பட்ஜெட்டை விட அதிகமாகவே வசூல் செய்து விடும் எனவே தயாரிப்பாளர்களும் தொடர்ந்து விஜய் ஒரு திரைப்படத்தை முடிப்பதற்குள்லேயே அடுத்தடுத்த பல திரைப்படங்களின் வாய்ப்புகளைத் தயாரிப்பாளர்கள் தந்து வருகிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் விஜய் நடிப்பில் இந்த வருடம் பொங்கலை முன்னிட்டு மாஸ்டர் படம் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றது. இத்திரைப்படத்தை தொடர்ந்து தளபதி விஜய் தனது 65வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.

இத்திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்று முடிந்துள்ளது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறுவதற்காக செட்டுகள் போடப்பட்டது ஆனால் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை மிகவும் வேகமாக பரவி வருவதால் படப்பிடிப்பு நடத்த கூடாது என்று உத்தரவு போடப்பட்டுள்ளது.

இப்படிப்பட்ட நிலையில் தளபதி 66வது திரைப்படத்தைப் பற்றிய மாசான தகவல் வெளிவந்துள்ளது. தெலுங்கில் டாப் இயக்குனரான வம்சி தளபதி 66 திரைப்படத்தை இயக்க இதில் தில்ராஜ் தயாரிக்க உள்ளாராம்.திரைப்படம் பல கோடி பட்ஜெட்டில் உருவதால் மற்றொரு தயாரிப்பாளராக PVP புரோடக்சன் இணைந்து உள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.

Leave a Comment