தளபதி 65: ஜார்ஜியாவை தொடர்ந்து அடுத்தகட்ட படப்பிடிப்பை எங்கு தொடங்குகிறார்கள் தெரியுமா.!

0

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடிகட்டி பறந்து வருபவர் தளபதி விஜய். பொதுவாக இவர் ஆரம்ப கட்டத்தில் பெரிதாக இவர் நடிக்கும் திரைப்படங்கள் வெற்றி பெறவில்லை என்றாலும் தனது விடா முயற்சியால் தற்போது இவர் நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களும் விமர்சன ரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும் வசூல் ரீதியாக சாதனை படைத்து விடுவது வழக்கமாக இருக்கிறது தற்போது இவர் தமிழ் சினிமாவின் சக்கரவர்த்தியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் தற்போது இவர் நடிப்பில் இறுதியாக மாஸ்டர் திரைப்படம் வெளிவந்து வசூல் ரீதியாகவும் ,விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்றது .அந்த வகையில் உலகம் முழுவதும் 250 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதனை தொடர்ந்து தற்போது இவர் தனது 65வது திரைப்படத்தில் நடித்துவருகிறார்.

இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க  நெல்சன் திலிப்குமர் இயக்கத்தில் உருவாகி வருகிறது. இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இவரை தொடர்ந்து காமெடி நடிகர் யோகிபாபு மற்றும் டிக் டாக் பிரபலம் அபர்ணா தாஸ் உள்ளிட்ட இன்னும் பலர் நடித்து வருகிறார்கள்.

இந்நிலையில் இத்திரைப்படத்தின் ஷுட்டிங் சில தினங்களுக்கு முன்பு தான் ஜார்ஜியாவில் சில வாரங்களாக நடைபெற்று முடிந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது சென்னையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளது .

அந்த வகையில் படப்பிடிப்பிற்காக பிரம்மாண்டமான ஷாப்பிங் மால் செட் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஷாப்பிங் செட் வெளிநாட்டில் உள்ள ஷாப்பிங் செட் அளவிற்கு அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்னும் சில தினங்கள் அல்லது வாரங்களில் தளபதி 65 திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்று எதிர்பார்க்கலாம்.