முழுசா நாலு படம் கூட இயக்காத இயக்குனரை நம்பி கோடிக்கணக்கில் முதலீட்டை போட்ட தயாரிப்பு நிறுவனம்..!

sun-picture
sun-picture

thalapathi 65 director nelson salary: தமிழ் திரை உலகில் தனக்கென ஒரு மாபெரும் ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர் தான் தளபதி விஜய் இவர் சமீபத்தில் மாஸ்டர் எனும் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளர். இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கியுள்ளர்.

மேலும் இந்த திரைபடத்தில் பிரபல பாலிவுட் நடிகை மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடித்துள்ளார்.  இவ்வாறு பெரும் முதலீட்டில் உருவான திரைப்படமானது படப்பிடிப்புகள் முழுவதுமாக முடிவடைந்த நிலையில் தற்போது பொங்கலுக்கு ரிலீஸாகும் என செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் தளபதி விஜய் தனது 65வது திரைப்படத்தை பிரபல இயக்குனர் நெல்சன் இயக்கவுள்ளாராம். மேலும் இந்த திரைப்படத்தை இயக்குவதற்காக சுமார் 6 கோடி வரை சம்பளம் பேசி உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இவர் இயக்கும் மூன்றாவது திரைப்படத்திற்கு இவ்வளவு பெரிய தொகையை பெறுவது மிகப் பெரிய வெற்றிதான் என பலரும் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இயக்குனர் நெல்சன் விஜய் டிவி மூலமாக பிரபலமானவர் ஏனெனில் விஜய் டிவியில் இயங்கிவரும் ரியாலிட்டி ஷோக்களானா ஏர்டெல் சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர்-1, பிக்பாஸ் என பல்வேறு நிகழ்ச்சிகளை இவர்தான் இயக்க உள்ளாராம்.

அதன்பிறகு பிரபல லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்புவை வைத்து வேட்டை மன்னன் எனும் திரைப்படத்தை இயக்கியுள்ளார் அதன்பிறகு பிரபல லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை வைத்து கோலமாவு கோகிலா என்ற திரைப்படத்தை இயக்கி உள்ளார் இந்த திரைப்படமானது ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் வெளுத்து கட்டி விட்டது.

இந்நிலையில் தளபதியின் 65வது திரைப்படத்தின் எதிர்பார்ப்புகளோடு மிக அதிகமாக இருந்து வருகிறது.

nelson
nelson