அச்சு அசல் எம்ஜிஆர் போலவே இருக்கும் அரவிந்த்சாமி இணையதளத்தில் வைரலாகும் தலைவி பட டீசர்.!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை பலரும் பலமாக எடுக்க ஆர்வம் காட்டி வந்த நிலையில் இயக்குனர் ஏ எல் விஜய் தலைவி என்ற டைட்டிலில் படத்தை இயக்கி வருகிறார், இந்த படத்தில் ஜெயலலிதாவாக நடிகை கங்கனா ரணாவத் நடிக்கிறார்.

மேலும் எம்ஜிஆர் ஆக அரவிந்த்சாமி நடிக்கிறார் இதற்கான முதற்கட்ட பணிகள் ஆரம்பமாகி தொடர்ந்து நடைபெற்று வருகிறது படப்பிடிப்பு, இந்த திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார் இந்தநிலையில் எம்ஜிஆரின் 103 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக தலைவி படத்தின் டீசர் வெளியிடப்பட்டது.

இதில் அரவிந்த் சாமி எம்ஜிஆர் ஆக தோன்றி நான் உங்கள் வீட்டுப் பிள்ளை என அசத்தலான நடனம் ஆடுகிறார், இந்தப் வீடியோவை பார்த்த பலரும் அரவிந்த் சாமியை பார்த்து பிரமித்து உள்ளார்கள் அதுமட்டுமில்லாமல் அவரைப் பாராட்டி வருகிறார்கள்.