தலைவி படத்தை 55 கோடிக்கு டிஜிட்டல் உரிமையை கைப்பற்றியதா!! OTT நிறுவனம்.? கங்கனா விளக்கம்.!!

thalaivi movie 55 crores to capture digital rights OTT company. Kangana Description: இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கத்தில் வெளியாக இருக்கும் திரைப்படம் தலைவி. இந்த திரைப்படம் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அம்மாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்படும் திரைப்படமாகும். மேலும் இந்த திரைப்படத்தில் ஜெயலலிதா அம்மாவாக நடிகை கங்கனா ரனாவத் நடித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர்-ஆக அரவிந்த்சாமி நடித்துள்ளார். மேலும் கலைஞர் கருணாநிதியாக நடிகர் பிரகாஷ் ராஜ் அவர்கள் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அதுமட்டுமல்லாமல் சில முக்கிய கதாபாத்திரங்களில் சில முன்னணி நடிகர், நடிகைகள் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியிட தயாராகி வருகிறது. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் அவர்கள் இசை அமைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கும் நடிகர், நடிகைகளின் தோற்றம் கதாபாத்திரத்திற்கு ஏற்றார்போல் பொருந்தி உள்ளதாக ரசிகர்கள் பாராட்டி உள்ளனர்.

இந்தப்படத்தின் தமிழ் மற்றும் ஹிந்தி ஆகிய இரு மொழிகளுக்கான டிஜிட்டல் உரிமத்தை ஏற்கனவே அமேசான மற்றும் நெட் பிளக்ஸ் நிறுவனத்திடம் 55 கோடிக்கு விற்கப்பட்டதாக நடிகை கங்கனா ரனாவத் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இந்த திரைப்படம் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு உள்ளதால் இதனை முதலில் திரையரங்குகளில் திரையிட்டால் தான் சரியாக இருக்குமென நடிகை கங்கனா ரணாவத்  தற்போது கூறியுள்ளார்.

thalaivi-tamil360newz
thalaivi-tamil360newz
aravindswamy-tamil360newz
aravindswamy-tamil360newz
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment