தலைவர் 171 : லியோ-வில் விட்டதை பிடிக்க 5 முரட்டு நடிகர்களை வில்லனாக களம் இறக்கப்போகும் லோகேஷ்.! லிஸ்டில் இடம் பெற்றுள்ள அஜித் பட நடிகர்..

thalaivar 171 : தென்னிந்திய சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இவர் இயக்கத்தில் வெளியாகிய மாநகரம், மாஸ்டர், கைதி, விக்ரம், லியோ ஆகிய திரைப்படங்கள் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. ஆனாலும் ஒரு சில ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றது இந்த விமர்சனங்களை ஏற்றுக் கொண்ட லோகேஷ் கனகராஜ் அடுத்த திரைப்படத்தில் சிறப்பாக செயல்பட உள்ளதாக அறிவித்திருந்தார்.

இதனால் லியோ திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை வைத்து தலைவர் 171 வது திரைப்படத்தை இயக்க இருக்கிறார் இந்த திரைப்படத்தின் கதை உருவாக்குவதில் மிகவும் முன்புறமாக ஈடுபட்டு வரும் லோகேஷ் கனகராஜ் முழு கதையும் தயாராகும் பட்சத்தில் தன்னுடைய இயக்குனர் குழு உடன் சேர்ந்து முழு கதையும் தயாரித்து வருகிறார்.

மற்றொரு பக்கம் லோகேஷ் கனகராஜ் தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தையும் அறிவித்து பட்டய கிளப்பி வருகிறார். ரஜினியை வைத்து இயக்கும் திரைப்படம்  முழுக்க முழுக்க எல் சி யு வில் இணையாமல் ரஜினிக்கு ஏற்ற திரைப்படமாக அமையும் என கூறப்படுகிறது லோகேஷ் கனகராஜ் ரஜினி இணையும் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர் மத்தியில் பல மடங்காக அதிகரிக்க தொடங்கியுள்ளது.

அதற்கு காரணம் லோகேஷ் கனகராஜ் திரைப்படம் என்றாலே ஹீரோவுக்கு இணையான வில்லன் வேடம் இருக்கும். அந்த வகையில் லோகேஷ் இயக்கிய அனைத்து திரைப்படங்களிலும் ஹீரோவுக்கு எவ்வளவு முக்கியத்துவமோ அதைவிட ஒரு மடங்கு வில்லனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து இயக்கியிருப்பார் அந்த வகையில் தலைவர் 171-வது திரைப்படத்தில் வில்லனாக நடிக்க சில ஹீரோக்களை தேர்வு செய்துள்ளார் லொகேஷ் கனகராஜ்.

அந்த வகையில் தலைவர் 171-வது திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ் வில்லனாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல் கிடைத்தது அது மட்டும் இல்லாமல் ராகவா லாரன்ஸ் சமீபத்தில் நடித்த ஜிகர்தண்டா 2, சந்திரமுகி 2 ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பு பெற்றது. அதுமட்டுமில்லாமல் ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் திரைப்படத்தில் வில்லனாக மிரட்டிய விஜய் சேதுபதியையும் வில்லனாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது மேலும் எஸ் ஜே சூர்யா வுக்கும் வில்லனாக நடிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

ஏனென்றால் எஸ் ஜே சூர்யா மார்க் ஆண்டனி திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார் அதுமட்டுமில்லாமல் பகத் பாஸில் தலைவர் 171 வது திரைப்படத்தில் வில்லனாக நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இப்படி பல நடிகர்கள் வில்லனாக நடிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் கிடைத்துள்ள நிலையில் நடிகர் அருண் விஜய் வில்லனாக நடிக்கவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது ஏனென்றால் அருண் விஜய் ஹீரோவாக நடித்த திரைப்படங்களை விட வில்லனாக நடித்த திரைப்படங்கள் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது.