தலைவர் 170 திரைப்படத்தில் 25 வயது இளம் நடிகை.! இதோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

Thalaivar 170 : தலைவர் 170 ஆவது திரைப்படத்தை ஞானவேல் ராஜா இயக்க இருக்கிறார் இந்த திரைப்படத்தில் ரஜினி அவர்களுடன் இணைந்து துஷாரா விஜயன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான திரைப்படம் ஜெயிலர் இந்த திரைப்படத்தில் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன் மிருனால் ரவி, மோகன்லால், சிவராஜ்குமார் விநாயகம், என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தார்கள் இந்த திரைப்படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் அடுத்ததாக தலைவர் 170 திரைப்படம் உருவாக இருக்கிறது ஆனால் இந்த திரைப்படத்திற்கு முன்பே தலைவர் 171 வது திரைப்படத்தின் அப்டேட் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது அதற்கு காரணம் தலைவர் 171-வது திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் அவர்கள் தான் இயக்க இருக்கிறார்.

எந்த ஒரு பரபரப்பும் இல்லாமல் திடீரென 171 வது அப்டேட் வெளியானதால் தலைவர் 170 வது திரைப்படத்தின் சுவாரஸ்யம் குறைந்துவிட்டது. இந்த நிலையில் மீண்டும் 170 வது திரைப்படத்தின் அப்டேட்களை படகுழு  வெளியிட்டு வருகிறார்கள் இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் அனிருத் தான் இசையமைக்க இருக்கிறார் அதுமட்டுமில்லாமல் ஞானவேல் ராஜா படத்தை இயக்க இருக்கிறார்.

தலைவர் 170-வது திரைப்படத்தை லைகா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க இருக்கிறது இந்த நிலையில் தற்பொழுது பர்ஸ்ட் லுக் போஸ்டர் உருவாகியுள்ளது இந்த திரைப்படத்தில் ரஜினி போலீஸ் கெட்டப்பில் இருப்பார் எனவும் கூறப்படுகிறது அக்டோபர் 4 ஆம் தேதி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது தலைவர் 170-வது திரைப்படத்தில் துஷாரா விஜயன் இணைந்துள்ளார் இவர் ரஜினிக்கு ஜோடியாகவா அல்லது மகளா, தங்கை வேடமா என்பது தெரியவில்லை ஆனால் இந்த திரைப்படத்தில் இவர் இணைந்துள்ளார்.