மோஷன் போஸ்டர் உடன் பிரமாண்டமாக வெளியானது தலைவர் 168 இன் தலைப்பு.!

thalaivar 168
thalaivar 168

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக வலம் வருபவர், இவர் அன்றிலிருந்து இன்றுவரை தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருக்கிறார், கடைசியாக ரஜினி அவர்கள் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் திரைப்படத்தில் தர்பார் திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் கடந்த பொங்கலுக்கு வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது.

இதனை தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் அடுத்ததாக தலைவர் 168 திரைப்படத்தில் ரஜினி அவர்கள் நடித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது, படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது இந்த நிலையில் இந்த படத்தின் முக்கிய அறிவிப்பை இன்று மாலை 6 மணிக்கு வெளியிட இருப்பதாக படத்தை தயாரிக்கும் சன் பிக்சர் நிறுவனம் அறிவித்திருந்தது.

அதேபோல் தலைவர் 168 திரைப்படத்தின் டைட்டிலை மோஷன் போஸ்டர் உடன் வெளியிட்டுள்ளார்கள், படத்திற்கு ‘அண்ணாத்த’ என டைட்டில் வைத்துள்ளார்கள். மேலும் இந்த திரைப்படத்தில் நயன்தாரா, கீர்த்திசுரேஷ், மீனா, குஷ்பூ, பிரகாஷ்ராஜ் என பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகிறார்கள்.

இந்த திரைப்படத்தின் மோஷன் போஸ்டரை ரசிகர்கள் அனைவரும் ஷேர் செய்து கொண்டு வருகிறார்கள்.