தலைவர் 168 மீனாவின் அசத்தலான கெட்டப் இதுதான்.! கீர்த்தி சுரேஷ்க்கு கேக் ஊட்டிய சூப்பர் ஸ்டார் வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்

darbar
darbar

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கயிருக்கும் திரைப்படம் தலைவர் 168, இந்த திரைப்படத்தை சன் பிக்சர் நிறுவனம் மிகவும் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது, சன் பிக்சர் தயாரிப்பதால் படத்தின் புரமோஷனுக்கு பஞ்சமே இருக்காது.

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்து, மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், பிரகாஷ் ராஜ், ஆகியவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள், படத்திற்கு இமான் இசையமைக்க இருக்கிறார். படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் சூட்டிங் நடைபெற்று வருகிறது.

மேலும் இந்த திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாகமீனாவும் கீர்த்தி சுரேஷ் தங்கையாகவும் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் சமீபத்தில் கிடைத்தது அதுமட்டுமில்லாமல் குஷ்பு வில்லியாகவும் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகின.

இந்த நிலையில் சில புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன, ஒரு புகைப்படத்தின் மீனாவின் புதிய கெட்டப் வெளியாகியுள்ளன, மற்றொரு புகைப்படத்தில் மகாநதி திரைப்படத்திற்காக கீர்த்தி சுரேஷ் தேசிய விருது வாங்கினார் எனவே அவரை வாழ்த்தும் விதமாக கேக் வெட்டி கொண்டாடி உள்ளார்கள் படப்பிடிப்பில் இதோ அதன் புகைப்படங்கள்.