தலைவா உனக்கு வயசே ஆகாதா.! இணையதளத்தில் லீக் ஆன தலைவர் 168 மிரட்டலான மாஸ் கெட்டப்.! வைரலாகும் புகைப்படம்.!

அன்றிலிருந்து இன்றுவரை சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த், இவர் இன்னும் அடுத்தடுத்த திரைப் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார், கடைசியாக சூப்பர் ஸ்டார் ரஜினி தர்பார் திரைப்படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் தர்பார் படம் நஷ்டம் என சமூக வலைத்தளத்தில் தகவல் பரவியது.

அதனால் பல திரையரங்க உரிமையாளர்கள் படம் நஷ்டம் இல்லை நன்றாக ஓடியது என கூறினார்கள், ஆனாலும் முருகதாஸ் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார், இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்ததாக சிறுத்தை சிவா இயக்கத்தில் தலைவர் 168 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்த திரைப்படத்தில் நடிகையாக நயன்தாரா ரஜினிக்கு ஜோடியாக நடிக்கிறார் அதுமட்டுமில்லாமல் கீர்த்திசுரேஷ் மகளாகவும், குஷ்பு, மீனா, சூரி, சதீஷ் என பல நட்சத்திர நடிகர்கள் படத்தில் இணைந்துள்ளார்கள்.

இந்த நிலையில் படத்திலிருந்து ரஜினியின் மிரட்டலான மாஸ் லுக் லீக்காகி உள்ளது, இதனை பார்த்து ரசிகர்கள் தலைவா உனக்கு வயசு ஆகாதா என கேள்வி கேட்டு வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.

Rajinikanth
Rajinikanth

Leave a Comment