தலைவர்-168 திரைப்படத்தில் நானா.! சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்கும் இளம் நடிகை.!

0

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்பொழுது ஏர் முருகதாஸ் இயக்கத்தில் தர்பர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வருகிற பொங்கலுக்கு பிரம்மாண்டமாக வெளியாக இருக்கின்றன மேலும் இந்த திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் ரஜினி படத்தில் முன்னணி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார், அதன் புகைப்படம் மற்றும் வீடியோவை இணையதளத்தில் வெளியாகி ரசிகர்களிடம் வைரல் ஆனது, மேலும் தர்பார் திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்தது.

இந்த நிலையில்  அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினி சிறுத்தை சிவா இயக்கும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார், இது ரஜினியின் 168 வது திரைப்படமாகும், இந்த திரைப்படத்தில் இசையமைப்பாளராக இமான் பணியாற்றியிருக்கிறார், அதேபோல் காமெடி நடிகர் சூரி படத்தில் இணைந்துள்ளார், இந்த நிலையில் ரஜினிக்கு ஜோடியாக மூத்த நடிகைகள் குஷ்பு,மீனா  ஆகியோர் நடிப்பதாக கூறப்படும் நிலையில் படத்தில் கீர்த்தி சுரேஷ் இணைந்துள்ளார்.

இவர் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கிறாரா அல்லது மகள் கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா என்பது இதுவரை தெரியவில்லை, இதுபற்றி கீர்த்தி சுரேஷ் கூறுகையில் ரஜினியின் மிகப்பெரிய ரசிகை நான் அவர் படத்தில் நடிக்கிறேன் என்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என கூறியுள்ளார்.