தலைவர் 168 அண்ணாத்த படத்தின் பர்ஸ்ட் லுக் இதுவா சமூகவலைதளத்தில் காட்டுத்தீயாய் பரவி வரும் புகைப்படம்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாராவும் மேலும் மீனா, குஷ்பு, கீர்த்தி, சுரேஷ், சதீஷ், பரோட்டா சூரி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறார்கள்.

இந்த திரைப்படத்தை மிகவும் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது சன் பிக்சர் நிறுவனம். சமீபத்தில் இந்த திரைப்படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டரை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டு படத்தின் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது.

இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போது வெளியாகும் என காத்துக் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள், அதுமட்டுமில்லாமல் சமூக வலைத்தளத்திலும் எப்பொழுது ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என கேட்டு வருகிறார்கள் இந்த நிலையில் ரசிகர் ஒருவர் அண்ணாத்த படத்திற்கு போஸ்டர் ஒன்றை டிசைன் செய்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

அந்த போஸ்டர் சமூக வலைத்தளத்தில் பல ரசிகர்கள் ஷேர் செய்து வருகிறார்கள் அதுமட்டுமில்லாமல் இதுதான் அண்ணாத்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரா என கேட்டு வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்.

annaththa
annaththa

Leave a Comment