தலைவர் 168 திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக பிரபல முன்னணி நடிகை யார் தெரியுமா இதோ அதிகாரபூர்வ அறிவிப்பு.

தமிழ் சினிமாவில் அன்றிலிருந்து இன்றுவரை சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடித்த தர்பார் படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது.இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினி அடுத்ததாக சிறுத்தை சிவா இயக்கத்தில் தலைவர் 168 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்த திரைப்படத்தில் நடிகை மீனா மற்றும் குஷ்பு, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடித்து வருகிறார்கள்.இதில் கீர்த்தி சுரேஷ் ரஜினிக்கு தங்கையாக நடிக்க மற்ற இருவரும் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார் என்ற தகவல் சமீபத்தில் வெளியானது.

இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக படத்தை தயாரிக்கும் சன் பிக்சர் நிறுவனம் தனது அதிகாரபூர்வ டுவிட்டர் அறிவித்துள்ளது. நயன்தாரா நடிகையாக தேர்வு செய்யப்பட்டால் குஷ்பு மற்றும் மீனாவுக்கு என்ன வேலை என ரசிகர்களிடம் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

ஆனால் தர்பார் திரைப் படத்தில் நயன்தாராவின் கதாபாத்திரம் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை என்பதால் சிவா மீது உள்ள நம்பிக்கையால் நயன்தாரா மீண்டும் ரஜினியுடன் இந்த திரைப்படத்தில் இணைந்துள்ளார் எனக் கூறப்படுகிறது.

Leave a Comment