தலைநகரம் 2 திரை விமர்சனம்.! ரைட்டாக சுந்தர் சி வெற்றி பெற்றாரா.?

தலைநகரம் திரைப்படத்தை யாராலும் மறக்க முடியாது ஏனென்றால் அந்த திரைப்படத்தில் நடிகர் வடிவேலு நாய் சேகர் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அது மட்டும் இல்லாமல் சுந்தர் சி யின் ஹீரோவாக அறிமுகமான படம் என பல அடையாளங்களைக் கொண்ட திரைப்படம் தான் தலைநகரம் தற்பொழுது ரைட் என்ற கதாபாத்திரத்தை முன்னிலையில் வெளிப்படுத்தி வெளியாகியுள்ள திரைப்படம் தான் தலைநகரம் 2.

சென்னை மாநகரம் மூன்றாக பிரிக்கப்பட்ட நிலையில் மாறன், நஞ்சுண்டா, வம்சி என்ற மூன்று ரவுடிகள் அதிக அட்டூழியம் செய்து வருகிறார்கள் மூவருக்கும் இடையே யார் நம்பர் ஒன் இடத்தை பிடிப்பது என்ற போட்டி நிலவி வருகிறது இப்படி இருக்கும் நிலையில் ரிட்டயர் ரௌடியாக தற்பொழுது அமைதியாக வாழ்ந்து கொண்டு வருபவர் சுந்தர் சி இவர் அப்துல் மாலிக் என்பவரிடம் இணைந்து ரியல் எஸ்டேட் பிசினஸ் நடத்தி வருகிறார்.

ஆனால் சென்னையில் இருக்கும் மூன்று மிகப் பெரிய ரவுடிகள் சுந்தர் சி இடம் தனித்தனியாக பிரச்சனை செய்து கொண்டிருக்கிறார்கள் அதனால் எப்படியாவது சுந்தர்சியை தீர்த்து கட்ட வேண்டும் என திட்டம் போடுகிறார்கள் அவர்களிடமிருந்து சுந்தர் சி தப்பித்தாரா இல்லையா என்பதே தலைநகரம் இரண்டாவது பாகத்தில் முழு கதை.

தலைநகரம் திரைப்படம் 2006 ஆம் ஆண்டு சுராஜ் இயக்கத்தில் வெளியானது இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது அது மட்டும் இல்லாமல் இயக்குனராக வளம் வந்து கொண்டிருந்த சுந்தர் சி இந்த திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் அவர் ரைட் என்ற ரவுடி கதாபாத்திரத்தை வைத்து இந்த திரைப்படமும் உருவாக்கப்பட்டுள்ளது.

படம் தொடங்கியதுமே வடசென்னை மத்திய சென்னை தென் சென்னை என மூன்று பகுதிகளாக மூன்று ரவுடிகளை அறிமுகம் செய்கிறார்கள் இந்த அறிமுகமே சுமார் அரை மணி நேரம் ஓடுகிறது ஒவ்வொரு ரவுடிக்கும் ஒரு பிளாஷ் பேக் இல் காட்சிகள் செல்கின்றன அதன் பிறகு ரவுடியின் வயதான ஆள் ஒருவர் அவன் குறுக்கே போயிடாதீங்க சார் என்கின்ற பாணியில் சுந்தர் சி க்கு மிகப்பெரிய பில்டப் கொடுக்கிறார்கள்.

முடிஞ்சா அவனுடைய நாய்க்குட்டியை தூக்குங்க என பெரியவர் சவால் விட அதனை கேட்டு சுந்தர் சி யின் நாய் குட்டியை ரவுடிகள் தூக்கி வந்து விடுகிறார்கள். நாய்க்குட்டியை தேடி வரும் சுந்தர் சி அனைவரையும் அடித்து போட்டுவிட்டு நாய்க்குட்டியை தூக்கிக் கொண்டு வருகிறார் என்னதான் ஆக்ஷன் திரைப்படத்தில் பலமான வில்லன்கள் இருந்தாலும் திரைக்கதை திக்கு தெரியாமல் திண்டாடுகிறது.

தம்பி ராமையாவை ஒரு ஹோட்டல் ரூமில் வைத்து சிபி சிஐடி ஆபிஸர் விசாரிக்கிறார்கள் அந்த இடத்தை போலீஸ் உதவியுடன் ட்ராக் செய்து நேரில் சென்று அதிகாரியிடம் பஞ்ச் டயலாக் பேசி சவால் விடுகிறார் நாயகிக்கே நாயகன் மீது வரும் காதல் எல்லாம் நம்பவே முடியாது அது மட்டும் இல்லாமல் மூன்றாவது பாகத்திற்கு குறிப்போடு படத்தை முடித்துள்ளது துணிச்சல்தான்.

சுந்தர் சி க்கு எது வருமோ அதனை குறைவே இல்லாமல் செய்துள்ளார் தம்பி ராமையாவும் அவரது மகளாக வரும் நடிகையும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார் ஜிப்ரானின் பின்னணி இசை படத்திற்கு பெரிதாக உதவவில்லை முகவரி, தொட்டி ஜெயா ஆகிய திரைப்படங்களை இயக்கிய vz துறை முழுக்க முழுக்க ஆக்ஷன் பாணியில் ஒரு படத்தை எடுக்க விரும்பியுள்ளார் ஆனால் வன்முறை காட்சிகளில் காட்டிய  நுணுக்கங்கள் திரைக்கதையில் காட்டி இருந்தால் தலைநகரம் 2 இன்னும் பட்டயக் கிளப்பி இருக்கும்.

Leave a Comment