விஸ்வாசம் பொய்யெனக் கூறியவருக்கு சரியான பதிலடி கொடுத்த தயாரிப்பு நிறுவனம்.!

0

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித் இவர் நடிப்பில் இந்த வருடம் தொடக்கத்தில் பொங்கலுக்கு வெளியான திரைப்படம் விஸ்வாசம் இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகும் மாபெரும் வெற்றி பெற்றது.

ஆனால் படத்தின் வசூல் பற்றி திருப்பூர் சுப்ரமணியம் பேட்டி ஒன்றில் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது, அவர் விஸ்வாசம் வசூல் பொய்யான வசூல் என கூறினார். இதனால் சமூக வலைத்தளத்தில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதற்கு பதிலளித்த விஸ்வாசம் படத்தின் தயாரிப்பு நிறுவனமான கேஆர் ஸ்டுடியோஸ் அதிரடியாக ட்வீட் ஒன்றை செய்துள்ளது, அதில் அவர் கூறியதாவது “பொங்கலுக்கு திரையிடப்பட்டு தீபாவளி வரை நாம் இதை பேசிக்கொண்டு இருக்கின்றோம். எனினும் எத்தனை தீபாவளி வந்தாலும், விஸ்வாசம் திரைப்படத்தின் சாதனையை மறந்துவிடவோ மறைத்துவிடவோ முடியாது. Happy Diwali folks! ” எனக் கூறியுள்ளார்.

விஸ்வாசம் திரைப்படம் உண்மையான வெற்றி திரைப்படம் என கே ஜே ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது