இந்திய கிரிக்கெட் அணியில் தல என அனைவராலும் அழைக்கப் படுபவர் தல தோனி, இவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஆவார், தற்பொழுது இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடி வருகிறார். தோனிக்கு இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறார்கள்.

தல தோனி இந்திய கிரிக்கெட் அணிக்காக மூன்று கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார் இவர் 2010 ஆம் ஆண்டு சாக்ஷி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த நிலையில் இந்த தம்பதிகளுக்கு ஜீவா என்ற அழகிய பெண் குழந்தை இருக்கிறது, இவர்களின் மகள் செய்யும் சேட்டை வீடியோக்கள் அனைத்தும் சமூக வலைதளத்தில் வைரலாகி நாம் பார்த்துள்ளோம்.

தோனி சாக்ஷியை முதன்முதலில் கல்கத்தா ஹோட்டலில்தான் சந்தித்துள்ளார். அப்பொழுது சாக்ஷி அந்த ஹோட்டலில்தான் வேலை செய்துள்ளார் அவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்தது பின்பு விரைவில் திருமணம் செய்து கொண்டார்கள்.

தோனி மனைவி சாக்ஷி முதலில் மாடலிங் துறையில் அதிக ஆர்வம் இருந்துள்ளார் அப்பொழுது அதிக ஃபேஷன் ஷோ நடத்தியுள்ளார், அப்பொழுது நடத்திய பேஷன் ஷோ புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.