தன்னுடைய முதல் திரைப்படமே தல அஜித்தின் திரைப்படம் தான்..! சந்திரலேகா சீரியல் நடிகை ஓபன் டாக்..!

swetha-1
swetha-1

பிரபல தனியார் தொலைக்காட்சிகளில் நடித்து வரும் பல்வேறு நடிகர் மற்றும் நடிகைகள் பலரும் முதலில் சினிமாவில் நடிப்பவர்கள் தான். அந்த வகையில் இவர்களுக்கு சினிமாவில் வாய்ப்பு குறைந்த உடனே அவர்கள் சீரியல் பக்கம் திரும்புவது வழக்கமாகிப் போய்விட்டது.

அந்த வகையில் தற்போது சீரியலில் நடித்த பல்வேறு நடிகைகளும் வெள்ளித்திரையில் பிரபல முன்னணி நடிகர்களுக்கு கதாநாயகியாக நடித்துள்ளார் என்பது பலருக்கும் தெரியாத விஷயமாகவே அமைந்துள்ளது. அப்படி சினிமாவில் இருந்து சீரியலுக்கு சென்ற நடிகை தான் ஸ்வேதா பண்டிட்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை பிரபல தனியார் தொலைக்காட்சியின் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சந்திரலேகா என்ற சீரியலில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது இவர் சென்னையில் பொறியியல் படிப்பை முடித்தவர்.

அதேபோல இவர் பல்வேறு விளம்பர படங்களில் நடத்துவதன் மூலமாக  அதன் பிறகு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. இந்த வகையில் கடந்த 2007ஆம் ஆண்டு நடிகர் அஜித் நடிப்பில் வெளியான ஆழ்வார் என்ற திரை படத்தில் அஜித்திற்கு தங்கையாக நடித்துள்ளார்.

இவ்வாறு நமது நடிகை நடித்த முதல் திரைப்படமே தல அஜித்தின் திரைப்படம் என்றாலும் இத்திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது அதன்பிறகு 2008 ஆம் ஆண்டு சத்யா நடிப்பில் வெளியான வள்ளுவன் வாசுகி என்ற திரைப்படத்தில் இவருக்கு கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது ஆனால் இவர் நடித்த அனைத்து திரைப்படங்களும் படுதோல்வி அடைந்ததன் காரணமாக பிறகு இவரை வைத்து படம் இயக்க எந்த ஒரு இயக்குனரும் முன்வரவில்லை.

swetha-1
swetha-1

அதன் பிறகு துணை கதாபாத்திரத்தில் நடிக்க ஆர்வம் காட்டிய நமது நடிகை பூலோகம் திரைப்படத்தில் கூட போட்டி அறிவிக்கும் அறிவிப்பாளராக ஒரே ஒரு காட்சியில் மட்டும் தென்பட்டு இருப்பார். ஆனால் தற்போது நமது நடிகையை சீரியலில் மிகவும் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.