போலீஸ் உடன் அஜித்.! வைரலாகும் புகைப்படம்.! இதுதான் காரணம்

தல அஜித் தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக வலம் வருபவர், தல அஜித் திரைப்படம் திரைக்கு வந்தாலே திரையரங்கம் திருவிழா போல் காட்சியளிக்கும், அதேபோல் அஜித்தை பற்றிய எந்த செய்தி வந்தாலும் அன்று சமூக வலைத்தளத்தில் ட்ரெண்டிங்கில் கொண்டு வந்துவிடுவார்கள் ரசிகர்கள்.

மேலும் அஜித் சினிமா வாழ்க்கை வேறு சொந்த வாழ்க்கை வேறு என தனி தனியாகப் பிரித்து வாழ்பவர், படங்களில் நடிப்பது தனது வேலையாக இருந்தாலும் தனது குடும்பத்துடன் நேரம் செலவிடுவது ஹாபி, பேஷன், பைக் ரேஸ் போட்டோகிராபி என அது அதற்கும் தனியாக நேரம் ஒதுக்கி சந்தோஷமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.

அஜித்திற்கு அதிக ஆர்வம் என்றால் பைக் ரேஸ், கார் ரேஸ், போட்டோகிராபி, மினி ஹெலிகாப்டர் ஆகியவைகளில் சில. சென்னையில் உள்ள குரோம்பேட்டையில் எம்ஐடி கல்லூரியில் உள்ள ஏரோ மாடலிங் துறையில் உள்ள மாணவர்களுக்காக ஆலோசகராக பணியாற்றினார் இந்தக் குழு சர்வதேச அளவில் அசத்தியது அனைவருக்கும் தெரிந்ததுதான்.

thala-ajith
thala-ajith

இந்த நிலையில் அஜீத் போலீசாருடன் இருக்கும் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது, தல அஜித் ஆளில்லா விமானத்தை இயக்குவது குறித்து போலீசாருக்கு பயிற்சி அளித்து வருவதாக கூறுகிறார்கள்.

ரசிகர்கள் இந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் அதிக அளவு ஷேர் செய்து ட்ரண்ட் செய்து வருகிறார்கள்.

thala-ajith
thala-ajith
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment