தனது அப்பா அம்மாவுடன் சாமி தரிசனம் சென்ற அஜித்.! இணையதளத்தில் வைரலகும் புகைப்படம்

0

thala ajith with his parents in thirupathi photo viral: தல அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். கொரோனா லாக் டவுனுக்கு பிறகு மீண்டும் ஷூட்டிங் தொடர்ந்து தற்போது இவர் நடிக்கும் சில காட்சிகள் ஹைதராபாத்தில் படமாக்கப்பட்டு எடுக்கப்படுகிறது.

இந்த திரைப்படத்தின் அப்டேட்டை கேட்டு ரசிகர்கள் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரை இணையதளம் மூலம் பல கருத்துக்களை தாறுமாறாக பதிவிட்டு வருகின்றனர்.

தல அஜித் வருடத்திற்கு ஒரு முறையாவது தனது பெற்றோருடன் திருப்பதிக்கு சென்று ஏழுமலையானை தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்த வருடம் கொரோனா காரணமாக ஏழுமலையானை தரிசனம் செய்ய முடியவில்லை.

இந்த நிலையில் கடந்த வருடம் சென்றபோது எடுத்த அந்த பழைய புகைப்படம் தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

ajith-in-tirupathi-with-parents-705x1024
ajith-in-tirupathi-with-parents-705×1024