ரசிகர்களுடன் ரோட்டில் தரையில் அமர்ந்து அஜித்!! வைரலாகும் வீடியோ.!! மேன் ஆஃப் சிம்பிளிசிட்டி என புகழும் ரசிகர்கள்..

0

thala ajith with his fans video:தமிழ் சினிமாவில் பல தோல்விகளைக் கடந்து தற்போது தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருபவர் தல அஜித். இவர் மற்றவர் கண்ணுக்கு ஒரு சுயநலவாதியாகவே இன்றும் காட்சியளிக்கிறார். அதற்கு முக்கிய காரணம் எந்த ஒரு பொது நிகழ்ச்சியில் இவர் கலந்து கொள்ளாதது.

இவர் ஏற்கனவே பல பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு அதில் கிடைத்த சில அனுபவங்களை காரணமாக தற்போது பொது நிகழ்ச்சிகளை தவிர்த்து வருகிறார். ஆனால் அதை பிடிக்காத சில நெட்டிசன்கள் இவரை கண்டபடி சித்தரித்து வருகின்றனர்.

இவர் மிகவும் எளிமையாக எந்த ஒரு பகட்டும் பாதுகாப்பும் இல்லாமல் சாதாரணமாக பொது இடங்களில் மக்களோடு மக்களாக உலா வருவார் அந்த புகைப்படம் மற்றும் வீடியோ இணையதளங்களில் வெளியாகி பரவியுள்ளது.

அந்தவகையில் தல அஜித் அவர்கள் ஹோட்டல் ஓன்றிற்க்கு சென்றபோது அங்குள்ள ரசிகர்கள் அவரை சூழ்ந்துகொண்டனர். பிறகு ரசிகர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க அஜித் அவர்களுடன் தரையில் ஒன்றாக அமர்ந்து புகைப்படம் ஒன்றை எடுத்துள்ளார்.

அப்போது அங்கு உள்ள தல ரசிகர் ஒருவர் இந்த நிகழ்வை வீடியோவாக எடுத்து அதனை தற்போது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் அஜித்தை மேன் ஆப் சிம்பிளிசிட்டி என அவரது ரசிகர்கள் அவரை கொண்டாடி வருகின்றனர். இதோ அந்த வீடியோ.