ஹோம்லி கிளாமர் என இரண்டு ஹீரோயின்களுடன் மல்லுகட்டபோகும் தல அஜித்..! AK62 லேட்டஸ்ட் அப்டேட்..!

0
thala-ajithkumar
thala-ajithkumar

தமிழ் சினிமாவில் ஏகத்துக்கு ரசிகர் கூட்டம் வைத்துள்ள நடிகர் என்றால் தல அஜித் தான் அந்த வகையில் இவர் சமீபத்தில் இயக்குனர் வினோத் இயக்கத்தில் துணிவு என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது மட்டும் இல்லாமல் வசூல் ரீதியாக மிகப்பெரிய சாதனை படைத்துவிட்டது.

மேலும் இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தன்னுடைய அடுத்த திரைப்படத்தின் வேலைகளில் மிக தீவிரமாகிய தல அஜித் அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தன்னுடைய அடுத்த திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி நிலையில் அவை அதிகாரவூர்வமாக அறிவிக்கப்பட்டது.

அதுமட்டுமில்லாமல் நீண்ட காலத்திற்கு முன்பாக அறிவிக்கப்பட்ட இந்த அறிக்கையின் படி தற்பொழுது சூட்டிங் தொடங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது அதற்கான முதல்கட்ட பணிகள் தற்போது விறுவிருப்பாக நடைபெற்ற வருவதாகவும் இதில் முழு மூச்சாக தல அஜித் இறங்கி உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

keerthi suresh-01
keerthi suresh-01

மேலும் இந்த திரைப்படத்தில் பல்வேறு முன்னணி நடிகைகள் நடிக்கப் போகிறார்கள் என கூறப்பட்ட நிலையில் சமீபத்தில் ஒரு ஹீரோயின் பெயர் இடம்பெற்றுள்ளது அதாவது இந்த திரைப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் பாலிவுட் நடிகை திஷா பாட்னி என இரண்டு கதாநாயகிகள் நடிக்கப் போவதாக கூறப்படுகிறது.

theesa
theesa

என்னதான் நாளுக்கு நாள் கதாநாயகிகள் பெயர் லீக் ஆகி வந்தாலும் இது குறித்து அதிகாரபூர்வமான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்பதே உண்மை.