வலிமை படத்தில் இத்தனை ஸ்டுண்ட் காட்சிகளில் நடித்துள்ள தல அஜித்.. இதுவரை இல்லாத அளவிற்கு இருக்குமாம்.! உச்ச கட்ட சந்தோஷத்தில் ரசிகர்கள்.

இளம் தலைமுறை இயக்குனர்கள் டாப் நடிகர்களுக்கு எப்போதும் ஒரு சிறந்த ஹிட் படத்தைக் கொடுக்க ஒவ்வொரு சீனையும் செதுக்குவது வழக்கம் அப்படித்தான் ஹச். வினோத் வலிமை படத்தின் கதைக்காக அஜீத்தை ஒவ்வொரு சீனையும் செம ஸ்டைலாகவும், கெத்தாகவும் வலிமை படத்தை எடுத்து வருகிறார்.

படம் ஆரம்பத்திலேயே அஜித்திற்கு இது ஒரு முக்கியமான படமாக இருக்கும் என்று கூறியதால் படத்தை எவ்வளவு தாமதமாக எடுத்து வந்திருதாலும் இதுவரை இல்லாத அளவிற்கு அதை காட்ட அவர் ரெடியாக இருக்கிறார்.

தற்போது படத்தின் முக்கால்வாசி படப்பிடிப்பு முடிந்த நிலையில் இன்னும் ஒரு சில காட்சிகள் எடுக்க படக்குழு வெளிநாட்டிற்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது ஆனால் கொரோனா அச்சம் காரணமாக செல்ல முடியாமல் தவிக்கிறது.

இந்த நிலையில் மற்ற எடிட்டிங் மற்றும் டப்பிங் வேலைகளை மிகச் சீக்கிரமாக முடித்து ரெடியாகி வைத்துள்ளது.ரசிகர்களுக்கு அஜித்தின் பிறந்தநாள் மே 1ஆம் தேதியை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட இருந்த நிலையில் சில காரணங்களால் அது ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் அஜித்தின் வலிமை படத்தைப் பற்றி அவ்வப்போது செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது ஒரு சூப்பர் செய்தி வெளியாகியுள்ளது.அஜித்தின் வலிமை படத்தில் முதல் பாதியில் 5 சண்டை காட்சிகளும் இரண்டாம் பாதியில் 4 சண்டை காட்சிகளும் எடுக்கப்பட்டுள்ளன.

இதில் பெரும்பாலான சண்டை காட்சிகளில் ஹாலிவுட் பட ரேஞ்சுக்கு மிரட்டும் என படத்தின் சண்டை பயிற்சியாளர்கள் சிலர் கூறுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.இதற்கிடையே குடும்ப கதைகளை திணித்து படத்தை வேறொரு லெவலில் உருவாக்கியுள்ளார் வினோத்.

இருந்தாலும் ஹாலிவுட் ஜாக்கிசான் படங்களில் தான் தொடர்ந்து எட்டு அல்லது ஒன்பது ஸ்டுண்ட் சீன்கள்  படத்தில் இருக்கும் அதற்கேற்றவாறு அஜித் படத்தில் தற்போது அமைந்துள்ளதால் போகிற போக்கில் ஜாக்கிசான் படங்களை ஓவர்டேக் செய்துவிடுவார் போல என பலரும் கூறுகின்றனர்.

Leave a Comment