25 ஆண்டுகளுக்கு முன்பே டூப் இல்லாமல் நடித்த தல அஜித்- ஸ்டுண்ட் காட்சிகளை பார்த்து அசந்த பிரபல நடிகை.! இப்ப சொல்ல என்ன காரணம் தெரியுமா.?

0

சினிமா ஆரம்பத்தில் சாக்லேட் பாயாக வலம் வந்த அஜித் தொடர்ந்து காதல் சம்பந்தப்பட்ட படங்களில் நடித்ததால் அப்பொழுது பெண் ரசிகர்களையும் அதிகம் கவர்ந்த நடிகர்களில் ஒருவராக அஜித் இருந்தார். இப்படி வெற்றியை நோக்கி ஆரம்பத்தில் பயணித்தபோது இவருக்கு ஏகப்பட்ட வெற்றி கிடைத்தது.

அதிலும் குறிப்பாக அஜித்தின் வாழ்கையை மாற்றிய படங்களில் ஒன்று காதல் கோட்டை  அஜித்தின்  கேரியரில் ஒரு அற்புதமான படம் இந்த அவரது சினிமா வாழ்க்கையை அடுத்த லெவலுக்கு எடுத்துக் சென்றது என்பது குறிப்பிடதக்கது.

காதல் கோட்டை திரைப்படம் அப்பொழுது சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது மட்டுமல்லாமல் இன்றளவும் இந்தப் படம் பேசும் பொருளாக மக்கள் மத்தியில் இருந்து வருகிறது இப்படம் இதுவரை வெளியாகி  25 ஆண்டுகள் ஆன நிலையில் அகத்தியன் மகள் நடிகை விஜயலட்சுமி சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

அவர் கூறியது : நான் கனி அக்கா, இரஞ்சினி நாங்க மூணு பேரும் அஜித்தை முதன் முறையாக பார்த்தது வான்மதி திரைப்படத்தில் தான். இந்த படத்தை எனது தந்தைதான் இயக்கியிருந்தார்.

நாங்கள் அனைவரும் அஜித்திடம் ரொம்ப ஜாலியாக பேசினோம்  அவரும் ரொம்ப ஜாலியாக பேசினார் அப்போது ஒரு சண்டைக் காட்சிக்கு தயாராகி இருந்தார் சண்டைக்காட்சியில் டூப் இல்லாமல் அவர் நடித்து அசத்தினார்.

சண்டை காட்சிகளில் டூப் இல்லாமல் நடிப்பது நமக்கு சமீபகாலமாகத்தான் தெரியும் ஆனால் அஜித் சினிமா ஆரம்பத்திலிருந்து சண்டை காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்து வருகிறார் என சொன்னார்.