ஒரு கை செய்ததை மறுகைக்குத் தெரியாமல் பார்த்துக் கொண்ட தல அஜித்..! பிரபல இயக்குனர் பகீர் பேட்டி..!

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக கொடி கட்டி பறந்து வரும் நடிகர் தான் தல அஜித் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் தற்பொழுது வினோத் இயக்கத்தில் துணிவு என்ற திரைப்படத்தில் நடித்து இருந்தார் அந்த வகையில் இந்த திரைப்படம் சமூகத்திற்கு ஒரு நல்ல விஷயத்தை எடுத்துரைக்கும் அளவிற்கு இருந்தது மட்டும் இல்லாமல் சூப்பர் ஹிட் அடித்துள்ளது.

மேலும் இந்த திரைப்படத்தில் தல அஜித் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிகாட்டியது மட்டும் இல்லாமல் மிகவும் வித்தியாசமாக இந்த திரைப்படத்தில் தன்னுடைய பாவனையை காட்டி உள்ளார் அந்த வகையில் ரசிகர்கள் பலரும் தல அஜித்தை விடாமுயற்சியின் காரணமாக இந்த உயரத்திற்கு தல அஜித் சென்றுள்ளார் அது மட்டும் இல்லாமல் இதனை கடந்து வர பல வலிகளை இவர் அனுபவித்துள்ளதாக  சிலர் கூறி வருகிறார்கள் ஆனால் இவர் பற்றி சம்பந்தப்பட்டவர்கள் கூறினால் மட்டுமே இது குறித்த உண்மையான தகவல்கள் வெளியாகும்.

அந்த வகையில் தல அஜித் ஒரு கையில் செய்கிற உதவியை மறுக்கைக்கு தெரியக்கூடாது என்ற எண்ணம் கொண்டவர் அந்த வகையில் இவரால் பலனடைந்த திரைப்பட இயக்குனர் ஒருவர் அஜித்தால் தனக்கு கிடைத்த உதவியை ஒரு பேட்டியின் மூலம் கூறியிருந்தார்  அந்த வகையில் அவர் கூறியது என்னவென்றால் நான்  ஷாலினி தந்தையின் நெருங்கிய நண்பர் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.

அதுமட்டுமில்லாமல் ஷாலினி குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் பொழுது நான் பல்வேறு திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளேன் மற்றபடி எனக்கும் அஜித்துக்கும் எந்த ஒரு சம்பந்தமும் கிடையாது அந்த வகையில் எனக்கு முதல் ஆப்ரேஷன் முடிவடைந்த நிலையில் இரண்டாவது ஆபரேஷன் செய்தால் உயிருக்கு ஆபத்து இருக்காது என்று சொல்லிவிட்டார்கள்.

director
director

இதனை அறிந்த தல அஜித் அவர்கள் மேக்கப் மேனை அவருடைய வீட்டிற்கு அனுப்பி வைத்து அவரை வரவழைத்தது மட்டுமில்லாமல் அவருக்கு ஆபரேஷன் செய்ய தேவையான நிதி உதவியை செய்தது மட்டுமில்லாமல் மாதம்தோறும் வீட்டிற்கு பத்தாயிரம் ரூபாயை செலவுக்கு அனுப்பி வைத்தாராம் தல அஜித் மேலும் அஜித்திற்கு தொந்தரவு கொடுக்க வேண்டாம் என்ற காரணத்தினால் அதன் பிறகு அரசு மருத்துவமனையில் என்னுடைய ஆபரேஷனை செய்து கொண்டேன் என அவர் கூறியிருந்தார்.

Leave a Comment