தல அஜித்தின் வலிமை திரைப்படத்தில் வில்லனாக பிரபல தெலுங்கு நடிகரா. இதோ முழு விவரம்.

தல அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில் தற்போது மூன்றாம் கட்ட படப்பிடிப்பு மும்பையிலும் அதனை அடுத்து சுவிட்சர்லந்து நாட்டிலும் நடைபெற இருக்கிறது.

படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் இன்னும் நடிகை யார்? வில்லன் யார்? என்ற தகவலை படக்குழு வெளியிடாமல் பாதுகாத்து வருகிறது, படத்தில் பிரசன்னா உள்ளிட்ட சில நடிகர்கள் வில்லனாக நடிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்ட நிலையில் அந்த தகவல்கள் எதுவும் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

இந்த நிலையில் பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா என்பவர் வலிமை திரைப்படத்தில் வில்லனாக நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகின. அதுமட்டுமில்லாமல் அடுத்தகட்ட படப்பிடிப்பில் அவர் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறுகிறார்கள்.

கார்த்திகேயா ஏற்கனவே ஆர்எக்ஸ் 100 என்ற தெலுங்கு படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

valimai villan
valimai villan

Leave a Comment