தல அஜித்தின் வலிமை திரைப்படத்தின் ரேஸ் காட்சியை டெல்லியில் எடுக்க தடை!! அதிர்ச்சியில் ரசிகர்கள்..

thala ajith valimai movie race seen in delhi : தல அஜித் எச். வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் தற்போது டெல்லியில் நடந்து கொண்டிருக்கிறது. மேலும் இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடந்தது.

அதனைத் தொடர்ந்து அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது கொரோனா காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. சேசிங் காட்சிகள் எடுப்பதற்கு வெளிநாடு போகப் படக்குழு திட்டமிட்டது. ஆனால் கொரோனா காரணமாக வெளிநாட்டிற்கு செல்ல முடியாத காரணத்தால் தற்போது இந்தியாவிலேயே எங்கேயாவது சேசிங் காட்சிகள் எடுத்துவிடலாம் என முடிவெடுத்து டெல்லியை தேர்வு செய்தனர்.

தயாரிப்பாளர் போனி கபூரை அவர்கள் எப்படியாவது டெல்லியில் மீதி உள்ள காட்சிகளை எடுத்து விடலாம் என முயற்சி செய்தார் ஆனால் அரசு அதற்கு அனுமதி அளிக்க மறுத்ததால் படக்குழு வேறு இடத்தை தேடி வருகிறது.

மேலும் இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா அவர்கள் இசையமைக்கிறார். ஹீரோயினாக பாலிவுட் நடிகை ஹீமா குரோஷி அவர்கள்  நடிக்கிறார். மேலும் இந்த திரைப்படத்திற்கு வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடிக்க உள்ளார்.

அதுமட்டுமல்லாமல் மற்றொரு வில்லனாக 100 திரை படத்தில் அதர்வாவுக்கு வில்லனாக நடித்த ராஜ் ஐயப்பாவும் நடிக்கவுளளார்.

Leave a Comment