கருப்பு கண்ணாடி கட்டுமஸ்தான உடம்பு மரண மாஸ் லுக்கில் வந்த தல அஜித்.! வைரலாகும் வீடியோ

மறைந்த முன்னாள் நடிகை ஸ்ரீதேவி தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் கன்னடம், இந்தி என பல மொழிகளிலும் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்து வந்தவர், இவர் தனது குடும்பத்துடன் 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி துபாயில் நடைபெற்ற உறவினரின் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.

அங்கு ராஸ் அல் கைமா நகரில் உள்ள ரிசார்ட்டில் தங்கியிருந்தார் அப்பொழுது அங்குள்ள குளியல் அறைக்கு செல்லும் பொழுது இரவு பதினொன்று முப்பது மணி அளவில் நெஞ்சுவலியால் அகாலமரணம் அடைந்தார், அவரின் மரணம் இந்திய ரசிகர்களிடையே மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியது.

இவர் இறந்து கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் நேற்று ஸ்ரீதேவியின் வீட்டில் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் திதி கொடுத்தார்கள், அந்த திதி சென்னையில் சிஐடி காலனியில் உள்ள அவரது வீட்டில் நடைபெற்றது. அதில் நடிகர் அஜித் கலந்துகொண்டுள்ளார்.

பின்பு அங்கிருந்து கிளம்பிய அஜித்தை வாசல்வரை வழி அனுப்பி வைத்துள்ளார் போனிகபூர் இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. இதை ரசிகர்களும் வைரலாகி வருகிறார்கள்.

https://twitter.com/TFC_mass/status/1235123207436296192

அஜித் தற்போது போனி கபூர் தயாரிப்பில் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டதட்ட 60 சதவீதம் முடிவடைந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

Leave a Comment