ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ‘தல-தளபதி’ இதுவரை பலரும் பார்த்திராத வீடியோ.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாகவும் வசூல் மன்னனாகவும் வலம் வருபவர் தல மற்றும் தளபதி விஜய், இவர்கள் இருவருக்கும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது அதேபோல் இவர்களின் திரைப்படம் திரைக்கு வந்தாலே ரசிகர்களுக்கு ஒரே கொண்டாட்டம் தான். அதேபோல் அஜித், விஜய் இருவரும் அவரவர்களின் ரெக்கார்டை மாற்றி மாற்றி முறியடித்து கொள்வார்கள்.

இந்த நிலையில் தளபதி விஜய் தற்போது மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் ஊரடங்கு காரணமாக திரைக்கு வராமல் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது, ஏப்ரல் மாதமே திரைக்கு வரவேண்டிய திரைப்படம் தன் மாஸ்டர். அதேபோல் அஜித்திற்கு வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்பு ஊரடங்கு காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அஜீத், விஜய் இருவருமே நல்ல நண்பர்கள்தான், இதனை பலமுறை இருவரும் கூறியுள்ளார்கள் பல மேடையில் ஆனால் அஜித் விஜய் ரசிகர்கள் இதனைப் புரிந்துகொள்ளாமல் ஒருவரை ஒருவர் தாக்கி கொள்வார்கள்.

இந்த நிலையில் பல இயக்குனர்கள் அஜித்-விஜய் ஒன்றாக நடிக்க வேண்டும் என கதை எழுதிக் கொண்டு காத்துக் கொண்டிருக்கிறார்கள், அதில் ஒருவர் வெங்கட் பலமுறை பல பேட்டியில் கூறியுள்ளார். இந்தநிலையில் அஜித், விஜய் இருவரும் ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொள்வது மிகவும் அரிது.

அந்த வகையில் அஜித், விஜய் இருவரும் ஒரே நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உளளார்கள் அப்பொழுது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் மிகவேகமாக வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ.

Leave a Comment