தமிழ் சினிமாவில் ரசிகர்களால் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாட கூடிய ஒரு நடிகர் யார் என்றால் அது தல அஜித் தான். இவர் நடிக்கும் திரைப்படங்கள் மேக ஹிட் அடைகிறதோ இல்லையோ இவருடைய நல்ல குணங்கள் மற்றும் திறமையின் மூலமாக எளிதில் பிரபலமாகிவிட்டார்.
இவ்வாறு தன்னுடைய சிறந்த உள்ளத்தின் மூலமாக பல்வேறு ரசிகர்களை கவர்ந்தது மட்டுமல்லாமல் பல்வேறான பிரபலங்களையும் தன் பின்னால் அலைய வைத்தவர். அதற்கு எடுத்துக்காட்டாக பல்வேறு பிரபலங்களும் தல அஜித்தை பற்றி பேட்டியில் பேசுவது வழக்கம் தான்.
பொதுவாக ஓவர் நடிகர்களுக்கும் ஒவ்வொரு தனித்தறமைகள் உண்டு ஆனால் தல அஜித்திற்கு அவ்வாறு கிடையாது ஏனெனில் தல அஜித் பல திறமைகளை தன்னுள் வைத்துள்ளார். ஆரம்பத்தில் வெறும் மெக்கானிக்காக தன்னுடைய வாழ்க்கை பயணத்தை தொடர்ந்தவர் தான் தல அஜித்.
இவர் தற்போது பல்வேறு வெற்றித் திரைப்படங்களில் நடித்ததன் மூலமாக தற்போது முன்னணி நடிகராக பிரதிபலித்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் பல்வேறு திறமைகளை தல அஜித் கொண்டிருப்பதை கருத்தில்கொண்டு ஒருவர் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
