பாகிஸ்தானிலும் தல அஜித் ராஜ்ஜியம்.!! ரசிகர்கள் கொண்டாட்டம்.

0

thala ajith movie in pakistan: தமிழ் சினிமாவில் அஜித் நடித்து கடந்த வருடம் வெளிவந்த திரைப்படம் விசுவாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை. இந்த இரண்டு படங்களுமே பெரிய அளவில் ஹிட் கொடுத்தது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.

விசுவாசம் குடும்ப கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் ஆகும். அதைபோலவே நேர்கொண்டபார்வை பெண்களுக்காக பெண்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம். இரண்டு திரைப்படத்திலும் தல அஜித் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

ஹெச் வினோத் இயக்கத்தில் அஜீத் தற்போது வலிமை என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.  60 சதவித படப்பிடிப்பு எடுத்து முடித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

வலிமை படத்தின் இயக்குனர் வினோத் அவர்களின் பிறந்தநாளுக்கு இசையமைப்பாளர் யுவன் அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார். உடனே ரசிகர்கள் வலிமை அப்டேட் சொல்லுங்கள் என யுவனிடம் கேட்க அதற்கு அவர் விரைவில் அப்டேட் வரும் எனக் கூறியிருந்தார்.

தல அஜித் நடித்த விசுவாசம் திரைப்படம் ஹிந்தியில் டப் செய்யப்பட்டு வட இந்தியா டிவி சேனல்களில் ஒளிபரப்பப்பட்டது. மேலும் அந்த ஹிந்தி டப்பிங் திரைப்படம் பாகிஸ்தானில் உள்ள  டிவி சேனல்களிலும் வெளியானது.  இதனை பார்த்த ரசிகர்கள் தல அஜித்தை புகழ்ந்துள்ளனர்.

இந்தியில் டப் செய்து பாகிஸ்தானில் வெளியான முதல் தமிழ் திரைப்படம் விசுவாசம் தான் என கூறப்படுகிறது. இதை அறிந்த தலை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.