மங்காத்தா திரை படத்தில் அஜித்தின் கதாபாத்திரம் நான்தான் நடிக்க வேண்டியது? மேடை மேடையாக ஏரி புலம்பும் பிரபல நடிகர். வைரலாகும் வீடியோ.

Mankatha : தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாகவும், தல எனவும் அல்டிமேட் ஸ்டார் ஆகவும் ஜொலித்து வருபவர் தல அஜித், இவரின் திரைப்படம் திரைக்கு வருகிறது என்றாலே திரையரங்கமே திருவிழாப் போலக் காட்சியளிக்கும், தல அஜித் குறித்து பல பிரபலங்கள் பேட்டியில் கூறி இருப்பதை நாம் கேட்டிருப்போம்.

சமீபகாலமாக அஜித் நடிப்பில் வெளியாகி விசுவாசம் திரைப்படமும், நேர்கொண்ட பார்வை திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது இந்த நிலையில் அஜித் வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்பொழுது கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது..

மேலும் வலிமை திரைப்படத்தை வருகின்ற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரை அரங்கில் வெளியிடப்படும் என படக்குழு அறிவித்திருந்தார்கள், இந்நிலையில் அஜீத் நடிப்பில் வெளியாகிய மங்காத்தா திரை படத்தில் ஜெய் அவர்கள் நடிக்க இருந்ததாக  சமீபத்தில் ஒரு பேட்டியில் ஜெய் அவர்களே கூறியுள்ளார்.

அஜித் திரைப்பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையாக இருந்தது திரைப்படம் மங்காத்தா, இந்த திரைப்படம் வெங்கட்பிரபு இயக்கத்தில் 2011ம் ஆண்டு வெளியாகியது, இந்த திரைப்படத்தில் அர்ஜுன், திரிஷா, ஆண்ட்ரியா என பல நட்சத்திரங்கள் நடித்து இருந்தார்கள், இந்நிலையில் சமீபத்தில் ஒரு மேடையில் நடிகர் ஜெய் அவர்கள் கூறியதாவது மங்காத்தாவில் நான் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என கேட்டு இருந்தேன்.

அஜித் சார் இந்த திரைப்படத்தில் ஒப்பந்தம் ஆகுவதற்கு முன்பு ஐந்து ஹீரோக்களில் ஒருவராக நான் நடிக்க இருந்தேன், நான்கு ஹீரோக்கள் ரெடி ஓகே என கூறினார்களம் ஐந்தாவது ஹீரோ அஜித் சார் இடத்தில் தான் நான் நடிக்க இருந்தேன். ஆனால் அஜித் அவர்கள் வந்தவுடன் மங்காத்தாவில் போலீஸ் அதிகாரியாக அவர் தான் நடித்தார், அதனால் அந்த வாய்ப்பும் எனக்கு பரிபோனது இதனை மேடையிலேயே பகிரங்கமாக கூறி வருத்தப்பட்டார் ஜெய்.

நடிகர் ஜெய் விஜய் நடித்த பகவதி திரைப்படத்தில் அவருக்கு தம்பியாக நடித்து தமிழ் சினிமாவில் முதன் முதலில் அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து சென்னை 28 திரைப்படத்திலும் நடித்து இருந்தார். என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment