ஏகே 62 திரைப்படத்தின் இயக்குனரை தூக்கியது போல இசையமைப்பாளரையும் தூக்கிய தல அஜித்.!

ஏகே 62 திரைப்படத்திற்கு இசையமைக்கும் இசையமைப்பாளர் பற்றிய தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது அது மட்டும் இல்லாமல் இதனால் ரசிகர்கள் செம்ம கடுப்பில் இருப்பதாகவும் கூறபடுகிறது. நடிகர் அஜித் மற்றும் எச் வினோத் கூட்டணியில் சமீபத்தில் வெளியான துணிவு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் அமோக வரவேற்பை பெற்றது.

துணிவு திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து ஏகே 62 திரைப்படத்தில் நடிக்க இருந்தார் ஆனால் இயக்குனர் விக்னேஷ் சிவன் கூறிய கதை நடிகர் அஜித்திற்கு திருப்தி அளிக்காததால் விக்னேஷ் சிவனை கதையில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று கால அவகாசம் கொடுத்து இருக்கிறார். ஆனால் இயக்குனர் விக்னேஷ் சிவன் அதை கேட்காமல் கதையில் எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தாமல் இருந்திருக்கிறார் இதனால் கடுப்பான அஜித் இயக்குனர் விக்னேஷ் சிவனை ஏகே 62 திரைப்படத்திலிருந்து நீக்கிவிட்டார்.

அதன் பிறகு ஏகே 62 திரைப்படத்தை யார் இயக்க போகிறார் என்ற பதட்டம் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து இருந்தது அந்த நிலையில் தற்போது தடம் படத்தின் இயக்குனர் மகிழ் திருமேனி ஏகே 62 திரைப்படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதனை தொடர்ந்து ஏகே 62 திரைப்படத்தின் இசையமைப்பாளரையும் அஜித் அவர்கள் நீக்கி இருப்பதாக தற்போது தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.

அதாவது ஏகே 62 திரைப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த ஏகே 62 திரைப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத் தான் என்று கூறியிருந்தார்கள் ஆனால் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் தடம் திரைப்படத்தில் இசையமைப்பாளராக இருந்த அருண் ராஜ் தான் ஏகே 62திரைப்படத்திலும் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

மேலும் ஏகே 62 திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் விரைவில் வெளியிடுவார்கள் என்றும் இந்த படத்தின் இயக்குனர் யார் என்றும் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment