ரசிகர்களை உஷாராக இருக்க சொல்லி,!! தல அஜித் வெளியிட்ட அறிக்கையால்!! ஆடிபோனா இணையதளம்.

0

thala ajith legal notice: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர். தல அஜித்திற்க்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. தற்போது கூட இவரது விஸ்வாசம் திரைப்படத்தை பாகிஸ்தானின் ஹிந்தியில் பார்த்துவிட்டு அவரது திரைப் படங்களை டப்பிங் செய்து போடுமாறு ரசிகர்கள் ஆவலுடன் கேட்டு வருகிறார்கள்.

பொதுவாகவே தல அஜித் படங்களில் நடிப்பதை தவிர வேறு எந்த ஒரு பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளமாட்டார்.  திரைப்பட விருது விழா, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், பட  பிரமோஷன், பாடல் பிரமோஷன் என எதிலுமே கலந்து கொள்ள மாட்டார். மேலும் அது போலவே அரசியல் சம்பந்தப்பட்ட எந்த ஒரு விஷயத்திலும் கருத்து தெரிவிக்க மாட்டார் என்பது அனைவரும் அறிந்ததே.

எனவே தற்போது புதிதாக சமூக வலைதளங்களில் அஜித்தின் பிரதிநிதி என்ற பெயரில் சில தினங்களாக தேவையற்ற வேலைகள் நடந்து வருகின்றன. இதனை அறிந்த அஜித் அவர்கள் அவரது வழக்கறிஞர் மூலம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அறிக்கையில் கூறியுள்ளதாவது தனிநபர் ஆதாயத்திற்காக அரசியல் கட்சிகள் என்னுடைய பெயரை பயன்படுத்தக்கூடாது. என்னுடைய பிரதிநிதி சுரேஷ் சந்திரா மட்டுமே வேறு யாரும் கிடையாது என அவர் கூறியுள்ளார்.

தொழில் ரீதியாகவோ அல்லது பணரீதியாகவோ யாராவது உங்களை அணுகினால் உடனே சுரேஷ் சந்திர அவர்களுக்கு தெரியபடுத்தவும். அவர் மட்டும்தான் என்னுடைய பிரதிநிதி எனவும் அதுமட்டுமல்லாமல் ஏதேனும் ஏமாற்று வேலைகள் நடந்தாலும் அதற்கு ஒருபோதும் நான் பொறுப்பாக மாட்டேன் எனவும் கூறியிருக்கிறார். கருத்தில் கொண்டு அனைவரும் கவனமாக செயல்படுங்கள் என அறிக்கை வெளியிட்டுள்ளார்.