பைக் மீது அதிக ஆர்வம் கொண்ட நடிகர் என்றால் அது தல அஜித் தான். இவர் சமீபத்தில் மிக பிரம்மாண்டமான டெர்மினேட்டர் பைக்கில் அமர்ந்து கொண்டு புகைப்படம் வெளியிட்டது சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.
தற்போது தல அஜித் வலிமை எனும் திரைப்படத்தில் நடித்துவருகிறார் இத்திரைப்படத்தின் அப்டேட்டுகள் எதுவும் வெளிவராமல் இருப்பதன் காரணமாக ரசிகர்கள் அப்டேட் பற்றிய கேள்வியை எழுப்பி வருகிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் தான் இந்த திரைப்படத்தின் அப்டேட்டை வெளியிட்டார்கள்.
இது ஒரு பக்கமிருக்க தல அஜித்திற்கு பைக் ஓட்டுவது என்றால் மிகவும் பிடிக்கும் அந்த வகையில் வெகு தொலைவில் இருசக்கர வாகனத்தில் பயணம் செல்வது வழக்கம் தான். இந்நிலையில் சிக்கிம்க்கு இருசக்கர வாகனத்திலேயே பயணம் செய்துள்ளார்.

அஜித் இவ்வாறு பயன்படுத்திய பைக்கின் பெயர் என்னவென்றால் பிஎம்டபிள்யூ 1200 ஜிஎஸ் அவெஞ்சர் பைக் ஆகும். இவ்வாறு உருவான இந்த இரு சக்கர வாகனம் ஆனது இந்தியாவில் விற்பனை கிடையாது. இதற்கு முன்னர் இந்தியாவில் விற்பனை செய்தபோது இதில் மூன்று மாடல்கள் உருவாகின.
அதில் 1170 சிசி இன்ஜின்தான் முதலில் பொருத்தப்பட்டிருந்தன இந்த எஞ்சின் 125 பிஎஸ் பவரையும் 125mm திறனையும் பெற்றுள்ளது. இவ்வாறு இந்த பைக் ஆனது 16 கிலோமீட்டர் லிட்டருக்கு கொடுக்குமாம். மேலும் இந்த பைக்கின் விலை என்னவென்றால் 17 லட்சம் முதல் 21 லட்சம் வரை நியமிக்கப்பட்டது.
