கே ஜி எஃப் பட வில்லனுடன் மல்லுக்கட்ட போகும் தல அஜித்..! சபாஷ் சரியான போட்டி..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் தல அஜித்தை இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சமீபத்தில் வினோத் இயக்கத்தில் வலிமை என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படத்தை தொடர்ந்து தற்பொழுது மீண்டும் அதே கூட்டணியில் தன்னுடைய 61வது திரைப்படத்தில் தல அஜித் நடித்து வருகிறார்.

அதேபோல இந்த திரைப்படத்தையும் இயக்குனர் போனி கபூர் அவர்கள் தயாரிப்பது மட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் இசையமைப்பாளராக ஜிப்ரான் இசையமைத்து வருகிறார்.  இவர் உருவாக்கி வரும் இந்த திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்புகள் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இது ஒரு பக்கம் படப்பிடிப்பில் மிக பிஸியாக இருந்து வந்தாலும் நடிகர் அஜித்குமார் அவர்கள் சமீபத்தில் மாநில அளவில் நடைபெறும் துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொள்ள இருக்கிறார் இந்த போட்டியானது திருச்சியில் நடைபெற உள்ளது இதனால் படப்பிடிப்பில் அவர் எப்பொழுது இணைவார் என்ற கேள்வி ரசிகர் மத்தியில் எழுந்துள்ளது.

அது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மஞ்சு வாரியார் சமுத்திரகனி வீரா போன்ற நட்சத்திரங்கள் நடிப்பது நாம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அது மட்டும் இல்லாமல் தற்பொழுது மிகப்பெரிய நடிகர் ஒருவரை இந்த திரைப்படத்தில் இணைக்க முடிவு செய்துள்ளார்கள் படகு குழுவினர்கள்.

அவர் வேறு யாரும் கிடையாது கேஜிஎப் இரண்டாம் பாகத்தில் அதிரா என்ற கதாபாத்திரத்தில் நடித்த கொடூர வில்லன் தான் இவருடைய பெயர் சஞ்சய் சத் பொதுவாக அஜித்திற்கு வில்லன் கதாபாத்திரம் கொடுத்தால் மிகச் சிறப்பாக நடிப்பார் என்பதை போல இவரும் அதே போல தான் கேஜிஎப் திரைப்படத்தில் தன்னுடைய மிரட்டலான நடிப்பை வழிகாட்டி இருப்பார்.

அந்த வகையில் இவர் சமீபத்தில் தல அஜித்தின் திரைப்படத்தில் இணைந்துள்ளதாக வெளிவந்த செய்தியின் மூலமாக ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளார்கள்.

adhira-1
adhira-1

Leave a Comment