தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடிகட்டிப் பறந்த வருபவர் தல அஜித் இவர் தற்பொழுது வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இப்படம் 90 சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ளதாக கூறப்படுகிறது நிலையில் விரைவில் படம் ரிலீசாகும் என்று ஆவலுடன் ரசிகர்கள் காத்து வருகிறார்கள்.
தல அஜித் சினிமாவில் மட்டுமல்லாமல் துப்பாக்கி சுடுதல், பைக் ரேஸ், ஆளில்லா சிறிய ரக விமானம் தயாரித்தல், ட்ரோன் பயிற்சி போன்ற பல திறமைகளை கைவசம் வைத்துள்ளார்.
அந்த வகையில் தற்போது தமிழ்நாடு மாநில அளவில் 46-வது துப்பாக்கி சுடுதல் போட்டியில் தல அஜித் கலந்துகொண்டு முதல் இடத்தை பிடித்துள்ளார். எனவே முதல் இடத்தை பிடித்ததால் தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது .எனவே ரசிகர்கள் உச்சகட்ட மகிழ்ச்சியை கொண்டாடி வருகிறார்கள்.
இன்று உலக மகளிர் தினம் என்பதால் பல பிரபலங்கள் தங்களது குழந்தைகளுடன் மற்றும் மனைவிகளுடன் இருக்கும் புகைப்படங்களையும்,வீடியோக்களையும் வெளியிட்டு அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

உலகம் முழுவதும் கொண்டாடப்படு மகளிர் தினத்தை முன்னிட்டு தல அஜித் பின்புறம் கட்டி அணைத்தபடி ஷாலினியும் முன்புறம் கட்டியணைத்தபடி தனது மகளும் இருக்கும் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோடு ஷாலினி தன் மகனுடன் இருக்கும் புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது.இதோ அந்த புகைப்படங்கள்.
