ஜிஎஸ்டி வரியோடு பண உதவியைச் செய்த தல அஜித்!! வைரலாகும் செக் லீப்.!! கெத்து காட்டும் தல ரசிகர்கள்.

0

thala ajith helped his gym trainer with gst check leaf: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித். இவர் எந்த ஒரு விளம்பரமும் இல்லாமல் மற்றவர்களுக்கு உதவி செய்வார் என்பதில் கருத்து வேறுபாடு இல்லை. இவருடன் நெருங்கி பழகுபவர்களுக்கு மட்டுமே இவரைப் பற்றி தெரியும். தல அஜித் பெரும்பாலும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

அதற்கு முக்கிய காரணமே ரசிகர்கள்தான். தன்னால் மற்றவர்கள் பாதிப்படைய கூடாது என்பதில் பெரிய அளவில் கவனம் உடையவர். இவருடன் சினிமா துறையில் இருக்கும் இயக்குனர்கள் ,உதவியாளர்கள் என பலருக்கு இவர் உதவி செய்துள்ளார். மேலும் நீண்ட நாட்களாக தன்னுடன் இருப்பவர்களுக்கு  தேவையான பண உதவி மற்றும் வீட்டு வசதி போன்றவைகளை அமைத்துக் கொடுப்பார்.

தனக்கு கீழ் பணிபுரியும் மற்றவர்களின் நலன் கருதி சுயநலமாக இல்லாமல் அவர்களுக்கு தேவையானவற்றை செய்து அவர்களை உயர்த்தி விடுவார். மேலும் அந்த வகையில் தனக்கு ஜிம் டிரைனர் ஆக இறந்தவருக்கு 5 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் காசோலை கொடுத்துள்ளார்.

தனக்கு ஜிம் டிரைனர் ஆக இருந்தவர் வீடு கட்டுவதற்காக தனது அம்மாவின் நகையை அடமானம் வைத்தால் அதனை திருப்புவதற்காக கொடுத்துள்ளார்.  அதோடு மட்டுமல்லாமல் அந்த 5 லட்ச ரூபாய்க்கு ஜிஎஸ்டி வரிக்காக 10 ஆயரம் ரூபாயை சேர்த்தே கொடுத்துள்ளார்.

இதனை அறிந்த அஜித் ரசிகர்கள் அவரை நினைத்து பெருமை கொள்கின்றனர். அஜித் ரசிகர்கள் என கெத்தாக இருப்பதற்கு இது தான் காரணம் என அவர்கள் கூறுகின்றனர். மேலும் அஜித் கொடுத்த அந்த காசோலையை அவர் போனில் போட்டோ எடுத்து வைத்துள்ளார் அந்த பிச்சர் தற்போது இணையதளத்தில் வைரலாகி  வருகிறது.

ajiththala
ajiththala